பக்கம்:சூரப்புலி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 திற்கு அளவேயில்க்ல. அப்படிக் காலில் கட்டிவிட்டுத் துறவி சிரித்துக்கொண்டிருந்தார். அந்தப் பாதரட்சைகளின் உபயோகத்தை அறியாமல் சூரப்புலி மலேத்து நின்றது. இமயமலையில் உள்ள கயிலாசத்திற்கு அன்றே யாத்திரை புறப்படுகின்ற விஷயம் சூரப் புலிக்குத் தெரியாது. கம்பளிப் போர்வைகளும் உடைகளும் அந்த யாத்திரைக்காக வேண்டியிருந்தன என்பதும் சூரப்புலிக்குத் தெரியாது. காலே பத்து மணிக்கே டெல்லி எக்ஸ்பிரஸில் சென்னையைவிட்டுப் புறப்பட்டதும் சூரப்புலி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது. போகிற இடம் எது என்று அதற்குத் தெரியாது. இருந்தாலும் சென்னேயை விட்டுப் புறப்பட்டது அதற்குத் திருப்தியளித்தது. ஒருநாள் முழுவதும்கூட டெல்லியில் துறவி தங்கவில்லை. மறுபடியும் ரயில் பிரயாணம். நல்ல வெயில் காலத்தில் இவ்வாறு துறவி எங்கு செல்கிருரென்பது சூரப்புலிக்கு விளங்கவில்லை. ஆனல் இவ்வளவு நீண்ட பயணத்திலும் தன்னையும் கூடவே அழைத்துச் செல்வதை தினத்து அது உள்ளம் பூரித்தது. துறவி சூரப்புலியோடு வெப்பம் மிகுந்த கீழ்ப்பகுதிகளே யெல்லாம் கடந்து குளிர்ச்சியான அல்மோராவை அடைந்தார். இமயமலைச் சாரலிலே அது கடல் மட்டத்திற்கு மேல் சுமார் 5500 அடி உயரத்திலிருக்கிறது. காத்கோடம் வரையில் ரயிலிலும் பிறகு அல்மோரா வரையில் பஸ்ஸிலும் பிரயாணம் செய்யலாம். அவ்வாறு தான் துறவி சென்ருர், அதற்கு மேலே போக வேண்டுமானுல் நடந்துதான் செல்ல முடியும். குதிரையில் எறியும் சில பகுதிகளைக் கடக்கலாம். அல்மோராவிலிருந்து சுமார் 250 மைலுக்கு மேல் சென்ருல்தான் கயிலாய கிரியைத் தரிசிக்க முடியும். உடல் துன்பத்தையும், பலவகையான ஆபத்துகளையும் பொருட்படுத்தாமல் செல்லுகின்றவர்களே கயிலாய யாத்திரை செய்ய முடியும். பனிப் பிரதேசத்திலேயே பல நாள்கள் செல்ல வேண்டும். நினைக்க முடியாத குளிரும், விபத்துகளும் உண்டு. இவற்றையெல்லாம் தெரிந்தே துறவி அல்மோரா வந்திருக் கிருர், இறைவனுடைய நினேவிலேயே இருக்கின்ற அவருக்கு உடல்ப்பற்றியும் அதற்கு நேரக்கூடிய ஆபத்துகளைப்பற்றியும் கவலை யேது? சூரப்புலிக்குக் கயிலாய யாத்திரை போகிற விஷயம் தெரியாது. எங்கோ நீண்ட பிரயாணத்திலிருப்பதாகமட்டும் அது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/81&oldid=840648" இலிருந்து மீள்விக்கப்பட்டது