பக்கம்:சூரப்புலி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 தெரிந்துகொண்டது. அதில் தனக்கும் பங்கு கிடைத்திருப்பதையும் துறவியின் அருகிலேயே இருப்பதையும் எண்ணி அது மகிழ்ச்சி கொண்டிருந்தது. அல்மோரா இமயமலைச் சாரலிலே இருக்கும் பட்டணம் : குளிர்ச்சியான இடம் , ஆரோக்கியத்திற்காகப் பலர் இங்கு வருவார்கள். கயிலாய யாத்திரை செல்பவர்களும் பெரும்பாலும் இங்கு வந்துதான் வேண்டிய ஏற்பாடுகள் செய்துகொண்டு புறப்படு வார்கள். இராமகிருஷ்ண மிஷனைச் சேர்ந்த மடம் ஒன்று இங்கே இருக்கிறது. அதிலுள்ள சாதுக்கள் மிகவும் நல்லவர்கள். கயிலாய யாத்திரை செல்லுபவர்களுக்குத் தம்மாலான உதவிகளேயெல்லாம் செய்வார்கள். அவர்களில் ஒருவர் தமது துறவி சூரப்புலியோடு அல்மோரா வந்திருப்பதைப்பற்றிக் கேள்விப்பட்டார். உடனே அவரை மடத்திற்கு அழைத்து வரச் சென்ருர். அந்தச் சமயத்தில் துறவி சூரம்புலியோடு பாதாளதேவி கோயிலில் தங்கியிருந்தார். அக்கோயில் அல்மோராவுக்கு வடபுறத்தில் ஓர் அழகான பள்ளத்தாக்கில் இருக்கிறது. அங்கே பல பெரியோர் கள் தவம் செய்திருக்கிருர்களாம். அங்குச் சென்று துறவி தியானத்திலமர்ந்தார். இராமகிருஷ்ண மடத்துச் சாதுவின் அன்பான அழைப்புக்கிணங்கி அவர் மடத்துக்கு வந்தார். துறவியின் பெருமையை மடத்திலுள்ளவர்கள் விரைவில் அறிந்து கொண்டார்கள். கயிலாய யாத் திரைக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துகொள்ளாமலேயே புறப்படத் தயாராக இருந்ததை அறிந்து எல்லா ஏற்பாடுகளேயும் அவர்களே ஆர்வத்தோடு செய்தார்கள்.

இங்கிருந்து கயிலாயம் போய்வர ஏழெட்டு வாரங்களாகும். அதனுல் வேண்டிய உணவுப் பொருள்களேயெல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று அவர்கள் வற்புறுத்தினர்கள்.

வழியிலே உணவெல்லாம் அந்த ஈஸ்வரனே கொடுப்பான். நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று துறவி கூறினர். இருந்தாலும் அந்தச் சாதுக்கள் அவரை வெறுங்கையோடு அனுப்பச் சம்மதிக்கவில்லை. பல நாள்களுக்குக் கெட்டுப்போகாம லிருக்கும் உணவுப் பண்டங்களைத் தயாரித்துத் தகர டப்பாக்களில் அடைத்துத் தந்தார்கள். சூரப்புலிக்கு வேண்டிய உணவும் தயாரித்துக் கொடுத்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/82&oldid=840649" இலிருந்து மீள்விக்கப்பட்டது