பக்கம்:சூரப்புலி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கம்பளிகளையும், உணவுப் பொருள்களையும் குதிரை மேலே ஏற்றிச் செல்ல வேண்டும். அதற்காகக் குதிரைக்காரன் ஒருவனையும் ஏற்பாடு செய்துவிட்டோம்” என்று அவர்கள் சொன்னர்கள். அவர்களுடைய அன்பிலே ஈடுபட்டுத் துறவி அந்த ஏற்பாட்டை மறுக்கவில்லை. ஆனால், அவருக்குச் சூரப்புலியைத் தவிர வேறு யாரும் தம்முடன் வருவது பிடிக்கவில்லை. இருந்தாலும் அவர் சாதுக்களின் விருப்பப்படியே நடக்கச் சித்தமானர். சரி, உங்கள் விருப்பப்படியே செய்கிறேன். ஆல்ை குதிரைக்காரனுடைய தொல்லே இமயமலையில் கிடைக்கும் சாந்தியையே தொகலத்துவிடுமே” என்று சிரித்துக்கொண்டே சொன்னர். வழியிலே எத்தனையோ ஏற்றங்களும், இறக்கங்களும் இருக்கும். பல ஆறுகளக் கடக்கவேண்டும். குதிரையில்லாமல் உங்களால் மூட்டையைச் சுமந்துகொண்டு இவற்றையெல்லாம் சமாளிக்க முடியாது’ என்று சாதுக்கள் அவருக்கு எடுத்துக் காட்டினர்கள்.

இந்த மூட்டையைவிடக் குதிரைக்காரனுடைய தொல்க்ஸ்தான் பெரிய மூட்டையாக இருக்கும்' என்று துறவி அனுபவம் வாய்ந்தவர் போலப் பேசினர். ஆணுல் குதிரைக்காரனே வேண்டாமென்று சொல்ல వఖీడి.

கபிலாய யாத் திரையை வேனிற்காலத்தில்தான் செய்யமுடியும். மற்றப் பருவங்களில் பத்துப் பன்னிரண்டாயிரம் அடி உயரத்திற்கு மேல் செல்வது மிகவும் கஷ்டம். எங்கும் உறைபனி மூடிக்கிடக்கும். கயிலாய கிரியை அணுக முடியாது. வேனிற்காலத்தில் உறைபனி உருகிக் கணவாய்களெல்லாம் வழி திறக்கும். அப்பொழுது திபெத்திலிருந்து வணிகர்கள் இந்தியப் பகுதிக்கு வரத் தொடங்கு வார்கள். அவர்கள் வருவதை அறிந்த பிறகே யாத்திரை செல்லு பவர்கள் அல்மோராவிலிருந்து புறப்படுவார்கள். கயிலாய கிரி கடல் மட்டத்திற்கு மேல் 2000 அடி உயரத்திலிருக்கிறது. எப் பொழுதும் வெள்ளே வெளே ரென்று அது பனியால் மூடப்பட்டிருக்கும். போகும் வழியிலே பல ஆபத்துகள் உண்டு. கல்லும், மண்ணும், பாறைகளும் சரிந்து விழுந்துகொண்டே இருக்கும், மிக வேகமாக ஓடி வரும் ஆறுகள் வழியிலே கொந்தளித்துக்கொண்டிருக்கும். சுமார் 250 மைல்களுக்கு மேல் மலேகளில் எறியும் இறங்கியும் ஆறுகளைக் கடந்தும் செல்ல வேண்டும். யாத்திரை செல்லுவோர் சிறு சிறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/83&oldid=840650" இலிருந்து மீள்விக்கப்பட்டது