பக்கம்:சூரப்புலி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

சரி, இதுவரையிலும் உனக்குண்டான கூலியை வாங்கிக்கொண்டு போய்வா' என்று சிரித்துக்கொண்டே சொன்னர். கூலியைப் பெற்றுக்கொண்டு குதிரைக்காரன் திரும்பிப் புறப்பட்டான். குதிரையின் மேல் போட்டிருந்த மூட்டையை அலட்சியமாக எடுத்து எறிந்துவிட்டுப் போன்ை. துறவி 'ஜாக்கிரதையாகப் போப் வா. உனக்கு எல்லா நன்மையும் உண்டாகட்டும்” என்று கூறி ஆசீர்வாதம் செய்தனுப்பினர். திரும்பிப் போவதாகப் பாசாங்கு செய்தால் துறவி தினக்கூலியை அதிகப்படுத்துவார் என்பது அவனுடைய எண்ணம். ஆல்ை, துறவி அப்படி ஒன்றும் செப்யவில்லை. கவலையோ கோபமோ கொள்ளாமல் சி ரி த் து க் கொண்டே அவனுக்கு விடை கொடுத்து அனுப்பினர். குதிரைக்காரனுக்கு இது பெரிய ஏமாற்றமாகப் போப்விட்டது. இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அவன் குதிரையை நடத்திக்கொண்டு சென்ருன். இதுவரை நடந்ததை யெல்லாம் சூரப்புலி கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தது. குதிரைக்காரன் முன்னல் ஒப்புக்கொண்டபடி செய்யாமல் திரும்பிப் போகிருன் என்பதை அது உணர்ந்துகொண்டது. அவன் பல தடவைகளில் துறவியிடம் பணம் பறித்ததையும் அது பார்த்திருந்தது. அப்பொழுதெல்லாம் அது கோபங்கொள்ளும். இருந்தாலும் சிரித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/86&oldid=1276972" இலிருந்து மீள்விக்கப்பட்டது