பக்கம்:சூரப்புலி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 எட்டியது. சூரப்புலி எச்சரிக்கையோடு சுமார் இரண்டு மணி நேரம் காட்டிற்குள் நுழைந்து கவனித்துவிட்டுத் துறவி இருக்கும் இடத் திற்குத் திரும்பிற்று. அப்போதும் துறவி எதிரே காட்சி அளிக்கும் பனிமலச் சிகரங்களைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தார். புறப் பட்டுப்போக வேண்டும் என்று குதிரைக்காரன் அவரை நச்சரித்துக் கொண்டிருந்தான். அவன் போடுகின்ற கூப்பாட்டினல் தியானம் கலந்து துறவி புறப்படத் தயாரானர். ஆனல் கானகத்தைச் சுற்றிவிட்டு வந்த சூரப்புலி அவர் புறப்படுவதைத் தடுத்தது. அவருடைய மேல் அங்கியைப் பிடித்து இழுத்து அங்கேயே இருக்கும்படி வாதாடிற்று. அப்படி அது வாதாடுவதில் ஏதோ ஒரு கருத்து இருக்க வேண்டு மென்று அவர் உணர்ந்தார். துறவிக்கும் அந்த இடத்திலேயே இருந்து பனிச்சிகரங்கலேப் பார்த்துகொண்டே இருக்க விருப்பம் அதல்ை அவர் குதிரைக்காரனப் பார்த்து, அப்பா, இப்பொழுது உச்சி நேரத்திற்கு மேலாகிவிட்டது, இந்த ஏற்றத்தில் ஏறி டிட்டிஹட் போவதற்குள் இருட்டாகிவிடும். ஆகையால் அதோ தெரிகின்றதே அந்தக் குகையிலே தங்கி நாளேக்குக் காலேயில் புறப் படலாம்' என்று அவர் சொன்னர், ஆனல், குதிரைக்காரன் அதற்கு இணங்குவதாக இல்லே. உடனே புறப்பட வேண்டும் என்று பிடிவாதம் செய்தான். அங்கேயே தங்க வேண்டுமென்று சூரப்புலி பலவிதமாகத் தன் விருப்பத்தைத் தெரிவித்தது. துறவி அதன் கருத்தைத் தெளிவாக உணர்ந்துகொண்டு அங்கேயே இருக்கத் தீர்மானித்தார். "நீங்கள் இங்கேயே இருப்பதானுல் நான் குதிரையை மட்டும் ஒட்டிக்கொண்டு புறப்படுகிறேன். நீங்கள் மெதுவாக நான்க்கு வரலாம். நான் இங்கே இருக்க முடியாது' என்று குதிரைக்காரன் கோபமாகச் சொன்னன். "அப்படியானல் நீ குதிரையை ஒட்டிக்கொண்டு போ. டிட்டிஹட்டில் நீ தங்கியிருந்தால் நாளேக்கு நான் வந்து சேருகிறேன்” என்று அமைதியாகச் சொன்னர் துறவி. "ஒரு நாள் அதிகமானல் சாப்பாட்டுக்கு என்ன செய்வது ?” என்று உறுமினன் குதிரைக்காரன். ஒரு நாள் அதிகமானல் ஒரு நாள் கூலியும் அதிகமாகும் அல்லவா ? அது போதாது போலிருக்கிறது. அதோடு சேர்த்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/88&oldid=840655" இலிருந்து மீள்விக்கப்பட்டது