பக்கம்:சூரப்புலி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 இந்த இணுமையும் வைத்துக்கொள்' என்று சொல்லிக்கொண்டே துறவி பணத்தை நீட்டினர். குதிரைக்காரன் அதை வாங்கிக் கொண்டு குதிரையை ஒட்டிக்கொண்டு புறப்பட்டான். துறவி அமைதி நிறைந்த முகத்தோடு பனிச்சிகரங்களை நோக்கியவாறு அமர்ந்தார். சுமார் இரண்டு மணி நேரம் ஆகியிருக்கும். குதிரைக்காரன் கதறி ஓலமிட்டுக்கொண்டு ஓடி வந்தான். அவன் கண்களில் பயம் தாண்டவமாடியது. "ஐயோ, சாமி, என் குதிரை போச்சே! வேங்கைப்புலி அடித்து விட்டது” என்று அவன் விம்மி விம்மி அழுதான். சூரப்புலி அங்கேயே தங்க வேண்டும் என்று விரும்பியதன் பொருள் இப் பொழுது துறவிக்குத் தெரிந்துவிட்டது. அந்தப் பகுதியிலே வேங்கைப் புலிகள் அதிகம். மனிதரைக் கொல்லும் ஆட்கொல்லிப் புலிகளும் சில சமயங்களில் அங்கே திரியுமாம். அப்படி வேங்கைப் புலி திரிவதை மோப்பத்தால் அறிந்தே சூரப்புலி மேற்கொண்டு போவதைத் தடுத்திருக்கிறது. துறவி சூரப்புலியைத் தட்டிக்கொடுத்துவிட்டுக் குதிரைக் காரணுக்கு ஆறுதல் சொல்லத் தொடங்கினர். சாமி, என் பிழைப்பே போச்சு. நான் இனி எப்படி என் குடும்பத்தைக் காப்பாற்றுவேன் ' என்று அவன் கண்ணிர்விட்டு அழுதான். "அப்பா, கவலேப்படாதே, ஆஸ்கோட்டைக்குப் போனதும் நானே உனக்கு ஒரு குதிரை வாங்கித் தருகிறேன்” என்று துறவி சமாதானப்படுத்தினர். அன்று இரவு குகையிலே தங்கினர்கள். புதிய குதிரை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியால் குதிரைக்காரன் இப்பொழுது உற்சாகமாகக் காரியங்கள் செய்ய முன் வந்தான். இருட்டாவதற்கு முன்பே காய்ந்த குச்சிகளையும் கட்டைகளையும் பொறுக்கிக்கொண்டு வந்து சேர்ந்தான். சற்று சரிவான பக்கத்திலே ஓடிக்கொண்டிருந்த ஓடையிலிருந்து குடிப்பதற்குத் தண்ணீர் கொண்டுவந்து வைத்தான். இருள் பரவத் தொடங்கியதும் குகைக்கு முன்னல் கட்டைகளைப் போட்டுப் பெரிய தீ உண்டாக்கினன். தீயைக் கண்டால் வனவிலங்கு எதுவும் அருகிலே வராது. அதற்காகவே இந்த எற்பாட்டை அவன் செப்தான். அப்படி உண்டாக்கிய தீ வெளிச்சத்திலேயே துறவியும் குதிரைக்காரனும் கோதுமைச் சத்துமா ரொட்டியை உணவாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/89&oldid=840656" இலிருந்து மீள்விக்கப்பட்டது