பக்கம்:சூரப்புலி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஒரே குட்டியை அழைத்துக்கொண்டு, வேகமாக ஒடி ஒரு சிறிய குன்றின்மேலே ஏறிற்று. அங்கே குட்டியை விட்டுவிட்டு, மறுபடி யும் ஆட்டுக்காரனுக்கு எச்சரிக்கை செய்ய ஒடிற்று. ஆல்ை, அதன் முயற்சி வீணுகப் போய்விட்டது. வெள்ளம், பட்டி கிடந்த நிலத்துக்குள்ளே புகுந்து, பட்டியையும் ஆடுகளேயும் அடித்துக் கொண்டு போய்விட்டது. ஆட்டுக்காரனும் வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டான். அவனுக்கு எச்சரிக்கை செய்ய வந்த பட்டிநாயும் வெள்ளத்திற்குப் பலியாயிற்று. அதன் பிறகுதான் அந்தக் குட்டி, எப்படியோ இரண்டு நாள் பட்டினியாக அலைந்து திரிந்து, கடைசியில் அந்தப் பெரிய மாளிகைக்கு வந்து சேர்ந்தது. அதல்ை, பணக்காரச் சிறுவன் செய்கிற வேடிக்கை விளையாட்டையும் சடையனின் உறுமலேயும், விரட்டலேயும் உணவை ஏமாற்றிப் பிடுங்கும் அடாத செய்கையையும் பொறுத்துக்கொண்டு சூரப்புலி, ஆறு மாதங்கள் அந்த மாளிகையிலே கழித்தது. தினமும் அது பட்ட துன்பம் கொஞ்ச நஞ்சம் . அல்ல. இருந்தாலும், அந்த மாளிகையை விட்டுத் தெருவிலே போய் அலேய அதற்கு விருப்ப மில்லை. ஆனல் அதன் பிறகு ஒருநாள் நடந்த சம்பவத்தால் மாளிகை யிலே அதன் வாழ்வு முடிந்து போயிற்று. அந்தப் பெரிய மாளிகை யின் பின்புறத்தில் நிறையக் காலி இடம் உண்டு. அங்கே கோழி களையும், குள்ள வாத்துகளையும் வளர்த்து வந்தார்கள். ஒருநாள் இரவு ஒரு பெட்டைக் கோழியைக் கூண்டிற்குள்ளே அடைக்க மறந்து விட்டார்கள். அதைக் கவனித்த சடையன். எல்லோரும் தூங்குகிற சமயம் பார்த்து அந்தப் பக்கம் வந்து,சத்தம் செய்யாமல் கோழியைப் பிடித்துக்கொண்டது. பகலிலே தாராளமாகப் பக்கத்தில் வந்து விளையாடும் சடையனக் கண்டு, கோழி பயப்படவில்லை. அதல்ை, சடையனுக்கு அதைப் பிடிப்பது எளிதாக முடிந்தது. மெதுவாகக் கோழியின் பக்கத்தில் போய், அதன் கழுத்தைப் பிடித்து, ஒரே கடியில் இரண்டு துண்டாக்கிவிட்டது. கோழி சத்தம் செய்யா மலேயே செத்துப்போய்விட்டது. சடையன் அந்தக் கோழியைத் தூக்கிக்கொண்டு. சூரப்புலி வழக்கமாகப் படுத்திருக்கும் இடத்திற்கு வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/9&oldid=840657" இலிருந்து மீள்விக்கப்பட்டது