பக்கம்:சூரப்புலி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 உண்டார்கள். சூரப்புலிக்கும் பங்கு கிடைத்தது. இரவிலே குகைக்குள் குதிரைக்காரன் படுத்துத் தூங்கின்ை. நிலா வெளிச் சத்திலே புது அழகோடு காட்சி அளிக்கின்ற நந்தா தேவியையும். பஞ்சசூலியையும் பார்த்துக்கொண்டு துறவி தீயின் முன்ல்ை அமர்ந்தார். சூரப்புலி எச்சரிக்கையோடு பக்கத்தில் படுத்திருந்தது. அடுத்த நாள் காலேயிலே குதிரைக்காரன் முன்னுல் நடக்கத் துறவி அவன் காட்டிய வழியிலே சென்ருர். சூரப்புலி உற்று நோக்கிக்கொண்டே முன்னலும் பின்னலும் ஒடிக்கொண்டிருந்தது. அடர்ந்த அடவியின் ஒரு பகுதியிலே குறுகலான வழிக்குப் பக்கத்தில் குதிரையின்மேல் ஏற்றிச்சென்ற மூட்டை அலங்கோலமாகக் கிடந்தது. அந்த இடத்திற்குப் போனதும் சூரப்புலி முன்ல்ை சென்று மோப்பம் பிடித்தது. பிறகு வழியைவிட்டு மரக்கூட்டங் களுக்கிடையே புகுந்து ஒரு புதரை நோக்கிச் சென்றது. துறவியும் குதிரைக்காரனும் அதைத் தொடர்ந்து பின்னல் சென்ருர்கள். புதரின் நடுவிலே குதிரை பிணமாகக் கிடந்தது. இரவெல்லாம் அதன் உடம்பைக் கடித்துத் தின்றுகொண்டிருந்த புலி அப்பொழுது எங்கேயோ போய்விட்டது. புலி அங்கேயில்லே என்பதைத் தெரிந்து கொண்டே சூரப்புலி அவர்களே அங்கே அழைத்துச் சென்றது. *-டம்பெல்லாம் கிழிபட்டுக் கிடக்கும் குதிரையைக் கண்டதும் குதிரைக்காரன் கதறி அழுதான். துறவி அவனுக்குச் சமாதானம் கூறிக்கொண்டே அந்த இடத்திலிருந்து வழியை நோக்கித் திரும்பி நடந்தார். ‘சாமி, இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேன். ஆஸ் கோட் வந்ததும் நீங்கள் சொல்லியபடி ஒரு நல்ல குதிரை வாங்கிக் கொடுங்கள்” என்று கூறிக்கொண்டே குதிரைக்காரன் மூட்டையை நன்ருகக் கட்டித் தோளில் தூக்கிக்கொண்டான். டிட்டிஹட்டை நோக்கிப் பயணம் தொடங்கிற்று. டிட்டிஹட்டில் துறவி ஒரு பள்ளிக்கூடத்தில் தங்கினர். ஆசிரியர் களும் மாணவர்களும் அவரைக் கண்டு பணிந்து அவருக்கு வேண்டிய வசதிகளைச் செப்து கொடுத்தார்கள். அந்த ஊரிலிருந்து ஆஸ்கோட் ஒன்பது மைல் தொலைவில் இருக்கிறது. அங்குச் சென்றதும் துறவி தாம் கூறியவாறு குதிரை ஒன்று வாங்கிக் குதிரைக்காரனுக்குக் கொடுத்தார். அவருடைய கருணையைக் கண்டு குதிரைக்காரன் பிரமித்துப் போனன். கர்ப்பியாங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/90&oldid=840658" இலிருந்து மீள்விக்கப்பட்டது