பக்கம்:சூரப்புலி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 தியானத்தில் அமர்ந்தார். மேற்கு வானத்திலே ஓங்கி நிற்கும் மல்களுக்கு மேலே சூரியன் இளஞ்சிவப்பாகத் தோன்றின்ை. மற்ற திசைகளிலெல்லாம் கண்ணுக்கெட்டிய வரையிலும் வானளாவிய கொடுமுடிகள் காட்சியளித்தன. துறவி மெய்ம்மறந்து உலகையும் மறந்து கடவுள் நினைவிலேயே லயித்திருந்தார். திடீரென்று மலேமுகடுகளிலே கருமேகங்கள் தோன்றின, ஆ" வாரத்தோடு அங்கே மழை பெய்தது. நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் கெளரி கங்கையில் வெள்ளம் பெருகிப் புரண்டோடத் தொடங்கிற்று. துளவி அமர்ந்திருக்கும் கல்மேடையையும் வெள்ளம் எட்டிப் பிடிக்கும் நிலையை அடைந்துவிட்டது. துறவியோ கண்மூடி மெய்மறந்து அசைவற்று வீற்றிருக்கிருர், வெள்ளம் மேடைக்கு மேலே வந்துவிட்டால் பிறகு தப்பிக் கரையேற முடியாது. அவ்வளவு வேகத்தில் வெள்ளம் பெருகிக்கொண்டிருந்தது. சூரப்புலி அந்த அபாயமான நிலையை உணர்ந்தது. துறவியின் அருகே சென்று மெதுவாகக் குரைத்தது. அவர் பாதங்களிலே முன்னங்கால்களே வைத்துத் தட்டியது. ஆனல் துறவியின் தியானம் கலேயவேயில்லே. அவரைக் காப்பாற்ற வேண்டுமென்று சூரப்புலி துடித்தது, ஆல்ை நிஷ்டை கலந்து எழுந்தாலும் வெள்ளம் இருக்கின்ற அந்த நிலேயிலே ஆற்றிலே நடந்தோ நீந்தியோ கரையை அடைவ தென்பது இயலாத காரியம். மனிதனுடைய சக்தியை மீறிவிட்டது வெள்ளத்தின் வேகம். அதை உணர்ந்துகொண்ட சூரப்புலி ஆற்று வெள்ளத்தில் பாய்ந்து குதித்தது. தன்னுடைய பலத்தையெல்லால் உபயோகப்படுத்தி ஜலஜீவி கிராமத்தை நோக்கி நீந்தத் தொடங் கிற்று. வெகுதூரம் ஆற்ருேடு சென்று எப்படியோ கரையை அடைந்துவிட்டது. அங்கிருந்த ஆசிரமத்திற்கு நாலு க ல் பாய்ச்சலில் சென்று ஆசிரமவாசிகளின் முன்னுல் பரபாப்போடு குரைத்துக்கொண்டும் கெளரிகங்கையை நோக்கி ஓடுவதுபோலவும் பாவனே செய்து அங்கும் இங்கும் அலேந்தது. அதன் செய்கையைக் கண்ட ஆசிரமவாசிகள் சந்தேகமடைந்தார்கள். துறவியில்லாமல் நாப்மட்டும் தனியாக வந்திருப்பதால், அவர் எங்கே என்று கவலேயுங் கொண்டார்கள். சூரப்புலி ஒருவருடைய ஆடையைப் பிடித்து ஆற்றை நோக்கி இழுத்தது. இது எங்கேயோ பிடித்து என்னேக் கூப்பிடுகிறது. கூடப்போய்ப் பார்க்கலாம்' என்று சொல்லிக் கொண்டே அவர் புறப்பட்டார். அவருடன் கூடவே வேறு இரண்டு பேர்களும் கிளம்பினர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/92&oldid=840660" இலிருந்து மீள்விக்கப்பட்டது