பக்கம்:சூரப்புலி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சூரப்புலி வேகமாக முன்னுல் ஓடிற்று, கெளரிகங்கையில் துறவி அமர்ந்திருக்கும் பாறைக்கு எதிராகக் கரையிலே வந்து நின்று பலமாகக் குரைத்தது. துறவிக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தான நிைைமயை ஆசிரமவாசிகள் உணர்ந்துகொண்டார்கள். மனிதல்ை இப்பொழுது செய்யக்கூடிய உதவி என்னவென்று ஒரு கணம் யோசித்தார்கள். துறவியைக் காப்பாற்றுவதற்கு மனிதல்ை முடியாது. ஆல்ை இந்த நாயால் ஒரு வேளே முடியலாம் என்று அவர்களுக்குத் தோன்றிற்று. உடனே ஒருவர் ஆசிரமத்திற்கு ஒடிப்போய் ஒரு நீளமான நூல் கயிற்றை எடுத்து வந்தார். அதன் ஒரு நுனியைச் சூரப்புலியின் கழுத்திலே பட்டைபோலச் சுற்றிக் கட்டினர். துறவி வீற்றிருக்கும் பாறையை நோக்கிச் செல்லுமாறு பிறகு பணித்தார். சூரப்புலியும் அவருடைய கருத்தை உணர்ந்து கொண்டு வெள்ளத்தில் குதிக்கத் தயாராயிற்று. 'நேராக இங்கிருந்து நீந்தித் துறவியிருக்குமிடத்திற்குச் செல்வதென்பது இயலாத காரியம். கரையிலே கொஞ்ச தூரம் மேலே சென்று அங்கிருந்து நாயை விடலாம்' என்று மற்ருெருவர் யோசனை கூறினர். அவசரத்திலே தோன்றிய அந்த யோசனைதான் சரியென்று மூவரும் சூரப்புலியை அழைத்துக்கொண்டு சுமார் நூறு கஜ தூரம் மேலே சென்று சூரப்புலியை வெள்ளத்திலே நீந்திப் போகுமாறு ஏவினர்கள். சூரப்புலியும் உற்சாகமாகத் தண்ணிரில் பாய்ந்து நீந்திற்று. கரையிலிருந்துகொண்டு ஆசிரமவாசிகள் நூல் கயிற்றை வேண்டிய அளவிற்கு ஆற்றில் விட்டுக்கொண்டிருந்தனர். அதற்குள்ளே வெள்ளம் துறவி வீற்றிருந்த மேடையை முழுகடிக்கும் நிலையை யடைந்துவிட்டது. வெள்ளம் பட்ட உணர்ச்சியால் தியானம் கலந்து துறவி எழுந்து நின்ருர். ஆசிரம வாசிகள் கவலையோடு நிற்பதையும் சூரப்புலி வெள்ளத்திலே நீந்து வதையும் அவர் கண்டார். ஆபத்திலே அவர் கலங்கவில்லை. என்றும் போல வழக்கமான புன்னகைதான் அவர் முகத்திலே விக்ளயாடியது. "கெளரி அன்ன என்ைேடு விளையாடுகிருள்” என்று சொல்லிக் கொண்டு கைகொட்டிச் சிரித்தார். வெள்ள ம் அவருடைய பாதங்களே மறைத்தது. சூரப்புலி வேகமாக நீந்திற்று. வெள்ளம் அதன் பலத்தை யெல்லாம் பரிசோதித்தது. சில சமயங்களில் வெள்ளத்தில் ஏற்படும் சுழிகள் சூரப்புலியை உள்ளே அழுத்தின. பாறைகளிலே சில சமயங்களில் சூரப்புலியை மோதியடித்தன. இருந்தாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/93&oldid=840661" இலிருந்து மீள்விக்கப்பட்டது