பக்கம்:சூரப்புலி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--~§ 沙 魏 % 燃 傲。 f # l -

  • A szino

தளர்ச்சியடையாமல் சூரப்புலி நீந்திற்று. கரையிலே நின்று ஆசிரமவாதிகள் கயிற்றை மெதுவாகத் தண்ணிருக்குள் விட்டுக் கொண்டிருந்தார்கள். கழுத்திலே கட்டிய கயிற்ருேடு சூரப்புலி துறவியை அடைந்துவிட்டால் அவர் கயிற்றைப் பிடித்துக்கொள்ள லாம். பிறகு, கரையிலிருக்கும் மூவருமாகச் சேர்ந்து கயிற்றை இழுத்துத் துறவியைக் கரைசேர்த்துவிடலாம். அதுதான் அவர் களுடைய திட்டம். ஆனல், அவர்கள் எண்ணியவாறு காரியம் நடைபெறவில்லே. நூறு கஜத்திற்கு ஆற்றின் மேல் பக்கமாக வந்து அதில் குதித்த போதிலும் சூரப்புலியால் துறவியிருக்குமிடத்தை அடைய முடிய வில்லை. அவருடைய கைக்கு எட்டாத தூரத்திலேயே சூரப்புலி வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகப்பட்டது. சூரப்புலி எவ்வளவோ முயன்றும் அவரை அணுக முடியவில்லை. ஆசிரம வாசிகள் தங்கள் கணக்குத் தவறு என்று உணர்ந்துகொண்டார்கள். உடனே வேகமாகக் கயிற்றை இழுத்தார்கள். கயிற்ருேடு சூரப்புலி யும் வந்தது. அது கரையை யடைந்ததும் ஆசிரமவாசிகள் மறு படியும் அதை அழைத்துக்கொண்டு ஆற்றின் ஓட்டத்திற்கு எதிர்த் திசையிலே மீண்டு ஓடினர்கள். இந்தத் தடவை துறவி யிருக்கும் இடத்திற்கு மேலே இரு நூறு கஜம் வந்தார்கள். அங்கிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/94&oldid=1276973" இலிருந்து மீள்விக்கப்பட்டது