பக்கம்:சூரப்புலி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 படியாகவும் வைத்துக்கொண்டார். ஒடையின் பாலக் கயிற்றை இரண்டு கையாலும் பிடித்தார். பிறகு லாகவமாகக் கால்களிரண்டை பும் தூக்கி அந்தக் கயிற்றிலேயே பின்னிக்கொண்டார். அவரே இப்பொழுது ஒர் ஊஞ்சல்போலப் பாலக் கயிற்றில் தொங்கிக்கொண் டிருந்தார். தமது மார்பின் மேலே ஏறிப் படுத்துக்கொள்ளும்படி குரப்புலிக்குச் சமிக்ஞை செய்தார். சூரப்புலி அவருடை எண்ணத்தை உணர்ந்துகொண்டது. தாவிக் குதித்து எறி அவர் மார்போடு சேர்ந்து படுத்தது. மூட்டையில் சேர்த்துக் கட்டிய சிறிய கயிற்றின் மற்ருெரு நுனியைத் துறவி தம் பல்லிலே கடித்துப் பிடித்துக்கொண்டார். கைகளால் பாலக் கயிற்றை மாறி மாறி எட்டிப் பிடித்து அதன் வழியாகவே செல்லத் தொடங்கினர். மரக் கவை அவருடைய பாரத்தைத் தாங்கிக்கொண்டு கயிற்றின் வழி பாகச் சுலபமாக வழுக்கிக்கொண்டே வந்தது. கைகளையும் கால் களையும் மாற்றிமாற்றி எடுத்து வைத்து, அணில் மரக்கிளேயின் அடிப் பாகத்தைப் பற்றிக்கொண்டு முன்னேறிச் செல்வதுபோல அவர் சென்ருர். கீழே பயங்கரமான ஆழத்திலே ஓடை உறுமிக்கொண்டு சென்றது. பலமுறை இவ்வாறு ஓடையைக் கடந்து பழக்கப்பட்டவர் போலத் துறவி லாகவமாகக் கயிற்றிலே தொங்கிக்கொண்டு சென்று அக்கரை சேர்ந்தார். சேர்ந்தவுடனே சூரப்புலியை முதலில் குதிக்கச் செய்துவிட்டுப் பிறகு அவர் தரையிலே காலெடுத்து வைத்தார். பிறகு பல்லிலே கடித் திருந்த கயிற்றைப் பிடித்து மெதுவாக இழுக்க லானர். அக்கரையிலே கயிற்றுப் பாலத்திலே தொங்கிக்கொண் டிருந்த மூட்டை. இப்பொழுது மெதுவாக ஓடையைக் கடந்து அந்தரத்திலே பிரயாணம் செய்யலாயிற்று. அதைப் பார்த்து சூரப்புலி ஆச்சரியமடைந்தது. துறவி முன்பே ஒன்றிரண்டு முறை பாவது கயிலாய யாத்திரைக்கு வந்து பழகியிருக்க வேண்டும் என்று தோன்றியது. முட்டையும் வந்து சேர்ந்தது. அதையெடுத்து முதுகிலே கட்டிக்கொண்டு ஊன்றுகோலே ஒரு கையில் பிடித்துக்கொண்டு துறவி நடக்கலானர். சுமார் ஒரு மைல் நடந்ததும் டார்ச்சுலா என்னும் ஊர் கண்ணுக்குத் தோன்றியது. அது பெரிய வாணிக மையம். நல்ல மைதானத்திலே அமைந்திருந்தது. பல தர்மசால் கள் அங்கே உண்டு. அவற்றில் ஒன்றிலே துறவி அன்றிரவு தங்கினர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/98&oldid=840666" இலிருந்து மீள்விக்கப்பட்டது