2
காலை மூன்று மணி நேரமும் மாலை இரண்டு அல்லது மூன்று மணி நேரமும் ஒருமிக்க 5 அல்லது 6 மணிநோம் வரையில் வசதியற்ற அறைகளில் இருக்கவேண்டியதாயிருக்கிறது. அப்பேர்ப்பட்டவர்களுடைய அங்கங்கள் சரியாகப் புஷ் யடைவதற்கு ஒரு கிரமமான தேகாப்பியாசம் அவசியமாயிருக்கிறது. சரீரப் பெருக்கத்திற்கும், மணப்பெருக்கத்திற்கும் ஆசோக்கியம், பலம், தகுதியான சக்தி இவற்றிற்குச் சரியான தேகப் பயிற்சித்தேவை யென்பதை தமது பெண்களும் பிள்ளைகளும் நன்றாகத்தெரித்து கொள்ளும் வரையில் அவர்களுடைய தாய்தந்தையர், போஷகர்கள், மற்றும் உபாத்தியாயர் முதலானோர் அகர்களைத் தேகப்பயிற்சி செய்யும்படிக் கட்டாயப் படுத்தவேண்டும். இந்த முக்கியாமான விஷயத்தை மாணவர்களின் இஷ்டப்படிவிட்டு விடுவது சரியல்ல. அன்றியும், வரவர தற்காலத்து மாணவர்கள் சக்தியிலும், மனோதிடத்திலும் தங்கள் முன்னோர்களைவிட மிகவும் க்ஷீணித்து வருகிறார்கள். இந்த க்ஷீண தசையைத் தவிர்ப்பதற்காக இம்மாதிரியான தேகப்பயிற்சியினுதவியால் நாம் தக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
(2) தேகப்பயிற்சி தேவையாயுள்ள அங்கங்கள்.
சரீரத்தின் நான்கு முக்கிய இந்திரியங்கள் தங்கள் தங்கள் காரியங்களைச்சரிவர நடத்தினாலொழிய மனிதன் ஆரோக்கியமாயிருக்க மாட்டான்; ஆகையால் அவைகளை அபிவிருத்தி செய்து பலமடையும்படிச் செய்யப் பிரயத்தனப்படவேண்டும். சூரிய நமஸ்காரங்களைக் கிரமமாகவும், சாஸ்திரீகமாகவும் செய்தால் இந்த நான்கு இந்திரியங்களும் நன்றாகப்பருத்து வியாதிகளுக்கும், அல்லது வியாதிகளுக்குக் காரணமான கிருமிகளுக்கும் இடங்கொடாமல் நம்மைக் காப்பாற்றும் என்பதை, நாங்கள் சொந்த அனுபவத்தினால் அறிந்திருக்கிறோம். இந்த நான்கு அங்கங்கள் எவையென்றால் :—
(1) ஜீர்ணத்தைச் செய்யும் அங்கங்கள் :—இரைப்பை (Stomach) யும், குடல் (intestines) களும் தத்தம் காரியங்களைச் சரியாகச் செய்யாமையால் அநேகர் அஜீர்ணத்தினாலும், மலச்சிக்கலினாலும் துன்பப்பட நேரிடுகின்றது. இவைகளினால் ஈரல்நோய், மகோதரம், மூலவியாதி (Piles) நீர்வியாதி (Diabetes ) முதலியவை சம்பவிக்கின்றன.
(2) இருதயமும், ஸ்வாச கோசங்களும்:—(Heart and the Lungs).இவைகள் துர்பலமாகின்றபடியால் சளி, இருமல், ஆஸ்த்மா , க்ஷயம் முதலான வியாதிகள் ஏற்படுகின்றன.