பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

(3) மூளை (Brain) :- இது கெடுவதனால் தலைநோய், ஒற்றைத் தலைநோய், பயித்தியம் முதலானவைகள் ஏற்படுகின்றன. (4) முதுகெலும்புக் கோர்வை (Spinal Cord) :- இது பலங்குன்றினால் சாதாரணமாக பாரிச வாய்வு, எல்லாத் தசை நார்களின் மேல் பிடிப்பில்லாமல் போவது, முதலிய குறிகள் ஏற்படுகின்றன. பொதுவாக நம் இந்தியா தேசத்தில் பயித்தியம் பிடித்தவர்களுடைய தொகை அவ்வளவு அதிகமாக இல்லை. ஆனால் மேற் கூறப்பட்டுள்ள முதலிரண்டு அங்கங்கள் கெடுவதனால் அகாலமரண மடைகின்றவர்களுடைய கணக்குக்கோ அளவில்லை. அதிலும் படிப்பாளிகள் விஷயத்தில் சொல்லவேண்டியதில்லை. அமிதமான உணவு அல்லது பக்குவமற்ற ஆகாரம் இவை முதலியவைகளை உட் கொள்ளுவதே அகால மரணத்திற்குக் காரணமாகின்றது. தவிரவும் சரியான தேகப்பயிற்சி செய்யாதிருப்பதும் ஒரு முக்கியமான காரணமாகும். ஆகையால் ஆரோக்கியமாகவும், நீண்ட நாள்வரைக் கும் வாழவேண்டுமாயிருந்தால் சூரிய நமஸ்காரங்களைப்போன்ற தகுதியான சாஸ்திரீகமான தேகப் பயிற்சிபைக் கூடிய மட்டும் அனு சரித்துவரவேண்டுமென்பது நமக்குத் தெளிவாக விளங்குகின்றது. அத்தியாயம் 2. வேறுவிதமான தேகப்பயிற்சியின் அனானுகூலங்கள் :- மேல் நாட்டு விளையாட்டுக்காகிலுஞ் சரி, கீழ்நாட்டு விளையாட்டுக்காகிலுஞ் சரி இவைகளுக்கு ஒருவர் அல்லது பலர் இருக்க வேண்டுமென்பது யாவரும் அறிந்த விஷயமே. குஸ்தி (மல்லயுத்தம்) செய்ய வேண்டு மானாலுங் கூட எதிராள் ஒருவன் தேவையா யிருக்கிறது. இதர விளையாட்டுகளுக்கு, கூட விளையாடுகிறவர்கள் அல்லது அவற்றிற்குத் தக்க கருவிகளாவது வேண்டியதா யிருக்கின்றன. இன்னும் சாதாரணமான தேகாப்பியாசத்திற்குக்கூட ஏதாவதொரு துணைக்கருவி வேண்டியதாயிருக்கிறது. கர்லா (Clubs) அல்லது டம்பெல்ஸ் (Dumbbells) இவைகளால் தேகப்பயிற்சி செய்ய வேண்டுமானாலும் அவைகளின்றி முடியாது. சவாரி செய்ய வேண்டுமானாலும் குதிரையாவது, துவிசக்ர வண்டியாவது (Bicycle) இருக்கவேண்டும். நீந்துவதற்கும் ஜலம் வேண்டும். நடப்பது அனுகூலமாயிருந்தாலும் காலதாமதமாகின்றது. அதற்கு ஒழிவு இருக்க வேண்டும். 15 அல்லது 20 நிமிஷங்களில் ஒரு மைல்