பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வீதம் நடப்பதாயிருந்தபோதிலும் 3 அல்லது 10 மைல்களுக்கு 2 அல்லது 3 மணி காலம் பிடிக்கின்றது. மைதானங்களில் செய்யவல்ல தேகப் பயிற்சிகளுக்குக் காலம் சரியாயிருக்கவேண்டும். நாம் செய்யும் தேகப்பயிற்சியானது நம்முடைய சரீரங்களையும் அவை சம்பந்தப்பட்ட அவயவங்களையும் நன்றாயிருக்கச் செய்வதல்லாமல் மனம் சாந்தமாயும், தெய்வபக்தியை யடையும்படிக்குஞ் செய்ய வேண்டும். இத்தகைய தேகப்பயிற்சியானது எல்லாருக்கும் எல்லா இடங்களிலேயும் வழக்கத்தில் சம்மதப்பட்டுவர வேண்டுமானால் அதற்கு எத்தகைய கருவிகளும் தேவையாகுவதில்லை. அன்றியும் அது சுலபமாகவும், கொஞ்சநேரத்தில் செய்யத்தக்க தாயுமிருத்தல் வேண்டும். மேலும் எந்த இடத்திலாகிலும், எவராலேயாகிலும், யாருடைய உதவியுமில்லாமல் செய்யத்தகுந்ததா யிருக்கவேண்டும். அத்தியாயம் 3. சூரிய நமஸ்காரங்களுக்குச் சமமான தேகப்பயிற்சி வேறு ஒன்றுங் கிடையாது :- ஏறக்குறைய எல்லாவிதமான தேகாப்பியாசங்களை யெல்லாம் நான் வெகுகாலம் செய்து பார்த்திருக்கிறேன். ஆனால் அவைகளின்கண் உள்ள அனானுகூலங்களை யெல்லாம் நாம் சற்று ஆலோசித்துப் பார்த்தால் சூரிய நமஸ்காரங்களே தேகப்பயிற்சிக்கு அனுகூலமானவை என்று நான் கண்டிப்பாய் சொல்லுவேன். சூரிய நமஸ்காரங்களைச் செய்து நான் மிகுந்த பிரயோஜனங்களை அடைந்திருக்கிறேன். ஆகையால் எட்டு வருஷத்திற்கு மேற்பட்ட பிள்ளைகளும், பெண்களும் சூரிய நமஸ்காரங்களை விடாமல் கிரமமாகச் செய்துவர வேண்டுமென்று நான் உறுதியாகக் கூறுகிறேன். பலஹீனமான இருதயத்தையும், ஸ்வாசகோசத்தையு முடையவர்கள் சூரிய நமஸ்காரங்களை பீஜ மந்திரத்துடன் கிரமமாகச் செய்து வந்தால் அவர்களுடைய வியாதிகள் அவர்களை விட்டு அகன்றுவிடும். சூரிய நமஸ்காரங்களினால் இரைப்பையும், குடல்களும், நரம்புகளும் தங்கள் தங்கள் காரியங்களைச் சரியாகச் செய்யும். சுமார் எட்டு வருஷங்கள் (3.. வயது) வரைக்கும் பெண்ணாகிலுஞ் சரி, பிள்ளையாகிலுஞ் சரி , மிகுந்த சுறுசுறுப்புடன் இருக்கிறார்கள். ஆகையால் அவர்களுடைய தசைகள் நல்ல நிலைமையிலிருக்கின்றன. அன்றியும் அவர்களுடைய இந்திரியங்கள் தத்தங் காரியங்களைச் செவ்வனே நடத்துகின்றன. எட்டு வயதான பிறகு அவர்களைத் தகுந்த தேகப்