பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பயிற்சியைச் செய்யும்படி வற்புறுத்த வேண்டும். குலம் கோத்திரங்களைக் கருதாது அவர்களைச் சூரிய நமஸ்காரங்களைச் செய்யும்படிச் சொல்லவேண்டும். எட்டு முதல் பன்னிரண்டு வயதுவரையிலுள்ளவர்கள் தினந்தோறும் 25 முதல் 50 நமஸ்காரங்கள் வீதமும், பன்னிரண்டு முதல் பதினாறு வயதுவரையிலுள்ளவர்கள் சாதாரணமாக 50 முதல் 150 நமஸ்காரங்கள் வீதமும், 16 வயதிற்குமேல்பட்டவர்கள் இவ்வெண்ணிக்கையைச் சிறிது சிறிதாக அதிகப்படுத்திக்கொண்டு தினந்தோறும் 300 நமஸ்காரங்கள் வீதம் செய்துகொண்டு வரவேண்டும். இவ்வப்பியாசத்தைப் பக்திச் சிரத்தையுடன் ஒரேவிதமாக அனுசரித்து வந்தால் எப்பேர்ப்பட்ட வியாதிகளும் நொடியில் தொலைந்துபோம். அன்றியும் அம்மாதிரி அனுசரித்து வருகிறவர்களுடைய மனதும் சரீரமும் மிகவும் நல்ல ஸ்திதியில் இருக்கும். சில மாதங்கள் வரைக்கும் தினந்தோறும் சுமார் 1000 (ஆயிரம்) நமஸ்காரங்களைச் செய்து வந்து, பிறகு 25க்குக் குறைந்தாவது அல்லது அறவே விட்டுவிடுதலாவது கூடாது. அப்படிச் செய்வது இரண்டு அல்லது மூன்று வேளை உணவை ஒரே தடவையில் உண்டு விட்டுப் பிறகு ஆகாரமின்றிக் கஷ்டப்பட்டுத் தேகத்தைக் கெடுத்துக்கொள்வது போலாகும். அன்னபானாதிகள் விஷயத்தில் கவனிக் கத்தக்கவல்ல சில விதிகளைத் தேகப்பயிற்சி செய்யும் காலத்தும் கவனித்தல் வேண்டும். தேகப்பயிற்சியினால் பிரயோஜனத்தை யடைய வேண்டுமானால் அதை விடாமல் பிரதி தினமும் சரியாக அவரவர்கள் சக்திக்கேற்றவாறு பழகுதல் வேண்டும். ஆகையால் நம் மனோரதம் நிறைவேறவேண்டுமானால் சூரிய நமஸ்காரங்களைச் சரியாகவும் சாஸ்திரீகமாகவுஞ் செய்தல் வேண்டும். அவை கயிற்றின் மேல் நடப்பவனது அங்க சேஷ்டைகளைப்போல் இருக் கக்கூடாது. சரீரத்தின் ஒவ்வொருபாகமும் புஷ்டியாகவும், பருமனாகவும், பலமாகவும் ஆகும்படி இந்நமஸ்காரங்களைச் செய்து வருதல் வேண்டும். நீங்கள் பலஹீனமாயிருந்தாலுஞ் சரி, பலாட்டி யராயிருந்தாலுஞ் சரி, சிறுவராயினுஞ்சரி, கிழவராயினுஞ் சரி, இந்த தேகப்பயிற்சியை உடனே தொடங்குங்கள். நாளைக்குச் செய்வோமென்பதைக் காட்டிலும் இன்றே செய்தல் நன்று. தேகத் தினமைப்புச் சரியாயில்லாவிட்டால் ஆரம்பத்திலேயே அதிகமாக நமஸ்காரங்களைச் செய்யப் பிரவேசிக்கவேண்டாம். சிறிதுகாலமே ஆயினும் தினம் இவற்றைச் செய்துவந்தால் மிக்கபலன் கிடைக்கும். இந்த அப்பியாசத்தைத் தினம் வழக்கத்