பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வைத்துக் கொள்ளவேண்டும். இடுப்பு, முதுகு, பின் தலை இவைகளெல்லாம் ஒரே வரிசையில் இருக்கவேண்டும். அன்றியும் சரீரமானது பெருவிரல்களாலும், உள்ளங்கைகளாலும் தாங்கப்படவேண்டும். சுவாஸத்தை அடக்கிக்கொண்டே இருக்கவேண்டும். (நான்காம் படத்தைப் பார்க்க) ஐந்தாம்நிலை:- சுவாஸத்தை அடக்கிக்கொண்டு பெருவிரல்களையும், உள்ளங்கைகளையும் நகரவொட்டாமல் முழங்கால்களை நிலத்தில் வைக்கவேண்டும். மோவாயை (Chin) மார்பின் மேல் பாகத்தில் படும்படிச் செய்யவேண்டும். தரையை மார்பினாலும், நெற்றியினாலும் ஒரே முறையில் தொடவேண்டும். ஆனால் அப்படிச் செய்யும்பொழுது மூக்கின் நுனி தரையின் பேரில் படக்கூடாது .வயிற்றைத் தரையில் படவிடாது உள்ளுக்கிழுத்துக்கொண்டு இடுப்பை (Hip) எவ்வளவு உயரமாக நிறுத்த முடியுமோ அவ்வளவு உயரமாக நிறுத்தவேண்டும். சுவாஸம் முழுவதையும் நன்றாக வெளியேவிட்டு விடவேண்டும். (ஐந்தாம் படத்தைப் பார்க்க ஆறாவதுநிலை:- பெருவிரல்கள் முழங்கால்கள் உள்ளங்கைகள் இவற்றை ஐந்தாம் நிலையினது போல்வைத்துக்கொண்டு, புயங்களை நீட்டியும், சுவாஸத்தை அழுத்தமாக உள்ளிழுத்தும், மார்பை முன்னுக்குக் கொண்டு வந்து தலையை மிகவும் உயரமாகத் தூக்கி ஒரு கூரையையாவது மாடத்தையாவது நேராகப் பார்க்கவேண்டும். பிறகு சுவாஸத்தை நிறுத்தவேண்டும். (ஆறாம் படத்தைப் பார்க்க) ஏழாவது நிலை:- சுவாஸத்தை அடக்கிக்கொண்டு நான்காம் நிலையின் தன்மையை அடைய வேண்டும். பிறகு உள்ளங்கைகளை நகர்த்தாமல் புயங்களைச்சரிவாக வைத்துக்கொண்டு, தலையைக் கீழாகத் தொங்கவிட்டுக்கொண்டு குதிக்கால்களினால் நிலத்தைத் தொட வேண் டும். சுவாஸத்தை அடக்கிக்கொண்டே இருக்க வேண்டும். (ஏழாம் படத்தைப் பார்க்க) எட்டாவது நிலை:- சுவாஸத்தை அடக்கிக்கொண்டு ஒரு காலை முன் கொண்டுவந்து கால் பெருவிரல்களை உள்ளங்கைகளுக்குச் சரியாகவைத்து, முழங்காலை நிமிர்ந்திருக்கும் புயத்திற்கு மேலே கொண்டுவா வேண்டும். நிலத்தை மற்றொரு முழங்காலினாலும், பெருவிரல்களாலும் தொடவேண்டும். மூன்றாவது நிலையின் தோற்றத்தை அடைய வேண்டும். சுவாஸத்தை அடக்கிக்கொண்டே இருக்க வேண்டும். (மூன்றாம் படத்தைப் பார்க்க)