பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஒன்பதாவது நிலை:-- சுவாஸத்தை அடக்கிக்கொண்டு இரண்டாவது நிலையின் தன்மையை அடைந்து சுவாஸத்தை நன்றாய் வெளியே விடவேண்டும். (இரண்டாம் படத்தைப் பார்க்க) பத்தாவது நிலை:- சுவாஸத்தை நன்றாக உள்ளிழுத்துக்கொண்டு முதல் நிலையின் தன்மையை அடைய வேண்டும். (முதல் படத்தைப் பார்க்க.) சரியாக நிமிர்ந்து நிற்கும் வரையில் முழங்கால்களை வளைக்காமல் நிமிர்த்துவைத்துக்கொள்ள வேண்டு மென்பதைச் சிறிதும் மறக் கக்கூடாது. பிறகு அடுத்த மந்திரத்தைச் சொல்லவேண்டும். வாயை மூடிக்கொள்ள வேண்டும். சுவாஸத்தை உள்ளுக்கிழுத்துக்கொண்டு மேற் கூறியுள்ள நிலைகளை மாற்றி மாற்றி அப்பியாசம் செய்யவேண்டும். அப்படிச்செய்யும் பொழுதெல்லாம் சுவாஸத்தை நாசியின் மூலமாகவே வெளிவிடவேண்டும். (General Instructions) பொதுவான போதனைகள்:- நிலத்தின் மேல்வைத்த அங்கைகளை ஒன்பதாவது நிலைவரைக்கும் எக்காரணத்தாலும் எடுக்கவாவது நகர்த்தவாவது கூடாது. இந்நமஸ்காரங்களைச் செய்வதற்காக நிமிர்ந்து நிற்குங்கால் சரீரத்தைவளைக்காமல் உறுதியாகவைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இடுப்பின் தசைநார்களை இறுகவைத்துக் கொள்வதில் கவனத்தைச் செலுத்தவேண்டும். இப்பத்து விதமான நிலைகளை இடைவிடாது ஒவ்வொன்றாகச் செய்தால் தான் ஒரு முழு நமஸ்காரமாகும். முதலில் சூரியநமஸ்மாரங்களை நிதானமாகச் செய்தல் வேண்டும். அப்படிச் செய்தால்தான் சரீரத்தின் எப்பாகமானது நன்றாப் அப்பியசப்படுகின்றது என்பது தெரியவரும். இப்பிரகாரம் நமது சரீரம் முழுவதும் பலத்தையடைகின்றது என்பது நமக்கு விளங்கும். சூரிய நமஸ்காரங்களினால் முழுப்பலனை அடையவேண்டுமானால் சரியானபடி சுவாஸத்தை வாங்கவும் விடவும் வேண்டும். மேற்குறித்துள்ள பத்து நிலைகளோடு கூடிய ஒரு முழு நமஸ்காரத்தைச் செய்யுங்கால் மூன்று முறை பூர்த்தியாகச் சுவாஸத்தை உள்ளுக்கிழுத்தும், பிறகு மூன்று முறை சுவாஸத்தை வெளியே விட்டும் வரவேண்டியது அவசியம். புதிதாக நமஸ்காரங்களைச்செய்ய ஆரம்பிப்பவன் இந்நிலைகளில் சுவாஸத்தை அடக்குவதிலும், விடுவதிலும் சிறிது கஷ்டப்படுவான்.