பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அப்பேர்ப்பட்டவன், நமஸ்காரங்களைச் சரியாகவும் சுயேச்சையாகவும் செய்யக்கற்றுக்கொள்ளும் வரையில் மூச்சு விடும் விஷயத்தில் கவலைப்படவேண்டாம். இந்நிலைகளில் கவனிக்கத்தக்க விஷயங்களை நன்றாய் அறிந்து கொண்டபிறகு மூச்சை விடவும், உள்ளிழுக்கவும் யத் தனிக்கலாம். மேற்குறித்தவற்றையெல்லாம் சரியாகவும் சுயேச்சையாகவும் செய்யக்கற்றுக்கொண்ட பிறகு நாம் நமது மனதை ஒரே வழியில் அதாவது - கடவுள் பால் நிற்கும்படிச் செய்தல் வேண்டும். அத்தியாயம் 5. நமஸ்காரங்களினால் சரீரம் எப்படி புஷ்டியாகிறது? மேற்குறித்த இப்பத்து நிலைகளினால் சரீரத்தின் எந்தெந்த பாகங்களுக்கு அப்பியாசம் ஏற்பட்டு எத்தசை நார்களுக்கு மிகவும் பயன் ஏற்படுகிறது என்பதைச் சற்று கவனிப்போம். முதல் நிலை:- இதனால் தனியான தசை நாராகிலும், தசை நார் கூட்டங்களாகிலும் தாக்கப்படா திருந்த போதிலும், தலையும், கழுத்தும், சரீரத்தின் அடிப்பாகமும் நேராக இருக்கவேண்டியபடியால் இடுப்பும் கழுத்தும் சிறிது அழுத்தமாக இருக்கவேண்டும். உருண்டையான புயங்கள் அல்லது வளைந்த முதுகோடு இருப்பவர்களுக்கு இதனால் சிறிது சிரமம் ஏற்படலாம். நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டு சுவாஸ கோஸங்களை (lungs) உப்பும்படிச் செய்ய வேண்டிய தாயிருப்பதால் இருதயத்திற்குக் கொஞ்சம் நோவு உண்டாகும். பின்னங்கை, முன்னங்கைகளையும், மணிக்கட்டுகளையும், விரல்களையும் வலுவாகவும், உறுதியாகவும் வைத்துக்கொள்ளவேண்டும். ஏனெனில், இவை தளர்ந்து விட்டால் ஒரு பிரயோஜனமும் ஏற்படாது. காற்றை முழுமையும் உள்ளிழுத்துக்கொண்டு மூச்சை அடக்கிக் கொண்டு உறுதியாகவும் நேராகவும் நின்று கொள்ள வேண்டும். இப் படிச் செய்வதனால் கழுத்து, இருதயம், புயங்களின் தசைநார் முத லியவைகளுக்கு நல்ல அப்பியாசம் ஏற்படுகின்றது. (முதல் படத்தைப் பார்க்க.) இரண்டாவது நிலை:- சிறிதளவு மூச்சை விட்டு முழங்கால்கள் நேராக இருக்குமாறு குனிந்து உள்ளங்கைகளைத் தட்டையாக 20 அல்லது 22 அங்குலங்கள் தூரத்தில் துணியின் மேல்