பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

களுக்கு நேராக வைக்க வேண்டும். உள்ளங்கைகளுக்கு அனுகூல மாகும்படிச் சாய்ப்பாக இருக்கவேண்டும். சேர்த்துவைத்துக்கொண்டிருக்கும் விரல்களுடன் இந்த உள்ளங் கைகளை முதல் நமஸ்காரத்தின் முடிவுவரையில், (அதாவது) சரீரமானது நேராக முதல் நிலைக்கு வரும்வரைக்கும் இவைகளைக் கொஞ்சங் கூட அசைக்காமல் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த ஸ்திதியில் தசைநார்கள், தொடைகளின் பின்பாகம், அரை, இடுப்பு முதலிய எல்லா அவயவங்களுக்கும் அதிகமாக அப்பியாசம் ஏற்படும். இவ் விடங்களில் தான் பலத்தைக்குறைத்துச் சரீரத்தை அழிக்கவல்ல விஷக்கிருமிகள் கூடும். இப்பாகங்கள் புஷ்டியடைவதனால் அவ்விஷக்கிருமிகள் அழிவதற்கு அவகாசமாகின்றது. அன்றியும், முதுகையும் புயங்களையும் சேர்க்கத்தக்கத் தசைநார்களுக்கு இதனால் மிகவும் சிரமம் ஏற்படும். புயங்களின் பின்பாகத்தின் தசைநார்களும் காரியத்தைச் சரியாகச்செய்யும். உள்ளங்கைகளைத் துணியின்மேலே வைக்கும் பொழுது முழங்கால்களை வளைக்காமல் குனிய வேண்டியதா யிருக்கிறபடியால் அடிவயிறும் இரைப்பையின் தசைநார்களும் மிகவும் இறுகும். குனிந்து உள்ளங்கைகளை வைத்தபிறகு உங்களுக்கு ஆரோக்கியமும், வல்லமையும், தீர்க்காயுளும் ஏற்பட வேண்டுமென்று மனதில் நினைத்துக்கொண்டிருக்க வேண்டும். பிறகு அடுத்த நிலைக்குப் புகவேண்டும். (2,3, படங்களைப் பார்க்க.) மூன்றாவது நிலை:- இதில், முதல் காரியத்திற்கும் கடைசி காரியத்திற்கும் விசேஷமாக வித்தியாசம் இல்லை. ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கும். வலக்காலைப் பின்னுக்கு எடுத்துக்கொள்ளும் பொழுது இடது தொடையானது மண்ணீரலை (spleen) அழுத்திக் கொண்டும், இடக்காலைப் பின்னுக்கு எடுத்துக்கொள்ளும் பொழுது வலது தொடையானது கல்லீரலை (Liver) பித்தாசயம் - அழுத்திக் கொண்டும் இருக்கவேண்டும். அதேமாதிரி தொடைகளின் கீழ்ப் பாகத்திலிருக்கும் தசைநார்களும் பலமாக அழுத்தப்பட்டுக்கொண்டிருக்கவேண்டும். பின்னுக்கு எடுக்கப்பட்ட தொடை, கணுக்கால், மணிக்கட்டு முதலியவைகளும் அழுத்தமடையும். நான்காவதுநிலை:- கீழே குனியும் பொழுது மோவாயானது மார்பில் படும்படித் தலையைத் தொங்கவிடவேண்டும். முன்னுக்கும் பின்னுக்கும் தலையைத் திருப்புங்கால் கழுத்து, தொண்டை இவற்றின் தசைநார்களுக்கு அப்பியாசம் ஏற்படுகின்றது. நமஸ் காரம் செய்யுங்கால் முழங்கால்களுக்கு மேலுள்ள சரீரமானது கைகள், மணிக்கட்டுகள், முழங்கைகள் இவைகளின் ஆதா