பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

(அழுக்கு) அழிவதற்குச் சகாயமாகி, வியாதியையும் நீக்கும் எனவே இருதயத்தினின்று சுத்த இரத்தமானது நன்றாகப் பாவவேண்டுமென்றே ஒவ்வொரு பீஜாட்சரத்தின் முதலிலும் ஹ' ஸ்வரத்தை சேர்த்திருக்கிறார்கள். பிரதியொரு மந்திரமும் ஹ' என்ற ஸ்வரத்துடன் தொடங்கு வதைப் போலவே 'ம் என்ற அநுநாசிக எழுத்துடன் முடிகின்றது. உச்சுவாஸ நிஸ்வாசங்களெல்லாம் மூக்கின் வழியாகவே செய்ய வேண்டும். இந்த மாதிரி மூச்சைவிட்டு இழுத்துக் கொள்வதனால் இரத்தம் சுத்தமாகின்றது. பிரதி சுவாஸத்திலும் உள்ளே செல்லும் படியான சுவாசவாயு (Oxygen) வானது நாளத்திற்குரிய இரத்தத்துடன் (Veinous blood) சேர்ந்து அதனைச் சிவப்பாகவும், சுத்தமாகவும் செய்து அசுத்த இரத்தத்திலிருந்து விஷக்காற்றாகிய கரிய மல வாயுவை (Carbondioxide) வெளிப்படுத்துகின்றது. பிராணேந்திரியகளைப் பலப்படுத்துவது:- அதைப் போலவே பிரதி பீஜமந்திரத்திலும் "ஹ' என்ற மகாப்பிராணாட்சரத்திற்கும், "ம்" என்ற அநுநாசிகத்திற்கு நடுவிலும் என்ற மெய்யெழுத்து இருக்கின்றது. மந்திர சாஸ்திரத்தில் 'ர என்ற எழுத்தானது கொஞ்சம் ஏறத்தாழ "ஓம் என்ற எழுத்தைப்போல் முக்கியமானதாய் இருக்கின்றது. "ர" என்னும் எழுத்தை உச்சரிக்கும் பொழுது நாக்கின் நுனியானது மேல் வாயை அடித்து மூளையை அதிரும்படிச் செய்கின்றது. இந்தமாதிரி “ஹ்ராம் ஹ்ரீம் முதலிய பீஜாட்சரங் களைச் சரியாகவும், நன்றாகவும் உச்சரிப்பதனால் சரீரத்தின் பலத் திற்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கியமான இருதயம், குரல்வளை (Wind pipe) மூளை முதலிய இவைகளை மிகவும் உரனடையும்படிச் செய்ய சாத்யமாகின்றது. அன்றியும் ஹ்ராம் ஹ்ரீம் முதலிய பீஜாட்சரங்களை உச்சரிக்கும் பொழுது ஹ்ரா ஹ்ரீ முதலிய வைகளை வாயைத் திறவாமல் சொல்ல வேண்டிய தாயிருக்கிறது. மற்றும் 'ம்' சப்தத்தை உச்சரிக்கும் பொமுது வாய் மூடப்படும். ஆகையால் நமஸ்காரங்களைச் செய்யும் பொழுதும் எல்லா அவயவங்களை அசைக்கும் பொழுதும் சுவாஸத்தை நாசியின் மூலமாகவே விடவேண்டும். அதைப்போலவே "மித்ராய நமஹ" முதலிய சூர்யனுடைய 12 பெயர்களை உச்சரிக்கும் போதுங் கூட "மஹ' என்ற எழுத்தை உச்சரிக்குங்கால் உதடுகள் மூடப் படுவதனால் சுவாஸத்தை மூக்கின் வழியாகவே விட நேரிடுகின்றது. "ஹ்ராம்" என்பதை உச்சரிக்கும் பொழுது "ஆ வை நீளமாக உச்சரிக்கவேண்டியபடியால் முதல் மூன்று பக்க எலும்பு