பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கள் பலமடைகின்றன. ஆகாரக் குழாயின் கண் உள்ள கிருமிகள் நாசமடைகின்றன. மூளை அதிர்ச்சி யடைந்து ஜடத்வமானது நீங்கி சுவாஸ கோசங்களின் மேல் பாகங்கள் சுத்தமடைகின்றன. "ஹ்ராம் " என்ற பீஜமந்திரமானது ஆஸ்த்மா வியாதியை நீக்கி க்ஷயரோகம் வரவொட்டாமலும் தடுக்கின்றது. (3) ஹ்ரீம்' என்பதிலுள்ள ஈ என்ற தீர்க்க ஸ்வரத்தினால் தொண்டை, மேல்வாய், மூக்கு, இருதயத்தின் மேல்பாகம் இவைகளெல்லாம் பலமடைகின்றன. 'ஹ்ரீம்' என்பதை அடிக்கடி உச்சரிப்பதனால் சுவாசகோசங்களிலும், ஆகாரக் குழாயிலும் சேர்ந்திருக்கும்படியான கபம் (phlegm - கோழை) முதலிய கெட்ட வஸ்துக்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, முதல் அல்லது இரண்டாவது சுற்று நமஸ்காரங்களைச் செய்யும்போது மூக்கு, தொண்டை, வாய், முதலிய இடங்களிலிருந்து சில சமயங்களில் கோழையை வெளித்தள்ள வேண்டிய தாயிருக்கின்றது. இரண்டு சுற்று முடிந்த பிறகு இப்பாகங்கள் சுத்தமடைகின்றன. இரைப்பையை உத்தீபனஞ் செய்வது. (4) ஹ்ரூம் என்ற பீஜாட்சரத்தில் "ஊ என்ற தீர்க்கஸ் வரத்தின் உச்சாரணையினால் கல்லீரல், மண்ணீரல், இரைப்பை, குடல்கள் முதலிய இவைகள் கிளர்ச்சியடைந்து வயிறானது சிறியதாக ஆகும். அடிவயிற்றில் நோவுடைய பெண்பாலர் இம்மந்திரத்தை அதிகமாக உச்சரித்தால் அவர்களுக்கு மிக்க பலன் உண்டாகும். (5) ஹ்ரைம் என்ற பீஜாட்சரத்தின் உச்சாரணையால் மூத்திரத்திற்குரிய அவயவமானது நமைச்சலடைந்து மூத்திரத்தைச் சரியாக வெளிப்படுத்தும். (6) ஹ்ரௌம் என்றபீஜாட்சரத்தினால் மலப்பை (Rectum) ஆசனம் (Anus) இவைகள் தங்கள் காரியங்களைச் சரி வரச் செய்கின்றன. இந்நமஸ்காரங்களைச் சாஸ்திரீகமாகச் செய்ய அப்பியாசம் செய்தால் மலசிக்கலானது நீங்கப்பெறும். நமஸ்காரங்களை முடித்த மணி நேரங்கழித்து சுலபமாக மலவிசர்ஜனமாகும். (7) ஹ்ரஹ" என்ற பீஜாட்சரத்தை உச்சரிக்குங்கால் இருதயத்திலும், தொண்டையிலும் கிளர்ச்சி உண்டாகும். மேல் விவரித்திருக்குமாறு இந்த பீஜாட்சரங்களை உச்சரிப்பதனால் இருதயம், தொண்டை, வயிறு, மேல்வாய், காற்றுக்குழாய், மூளை முதலிய அவயவங்கள் உத்தீபனமும், கிளர்ச்சியுமடைந்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தி கல்மஷங்களை நீக்கி ஆரோக்கியத்