பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அத்தியாயம் 8. ஒருமேல் நாட்டு சாஸ்திரஞ்ஞருடைய அனுபவம். பி. எம். லெஸ்ஸர் லாசிரியோ என்பவர் 1924 – ஏப்ரல் மா தத்து "பிசிகல் கல்சர் (Physical culture) என்ற மாதப் பத்திரிகையில் ஒரு விஷயத்தை எழுதியிருக்கிறார். அதன் கருத்தை அடியில் எழுதியிருக்கிறோம். பீஜமந்திரங்களில் அடங்கியிருக்கும் சக்தியின் விஷயமாக நாங்கள் கூறியிருப்பது உண்மை என்ற விஷயத்தை அவருடைய அனுபவத்தினால் அறியக்கூடும். "சுவாஸ உச்சுவாஸங்களைக் கிரமப்படுத்திக் கொண்டபடியால் நான் ஆரோக்கியபாக்கியத்தை அடைந்தேன். நீ விரும் அவ்விதம் அடைய முடியும். நான் வியன்ன (Vienna) நகரத்தில் பிறந்தேன். இளமையில் என்னுடைய சரீர ஸ்திதி மிகவும் மென்மையாய் இருந்தது. பள்ளிக்கூடத்தில் கல்வி விஷயத்தில் என் சக்தியை மீறி மிக்க கவனத்தைச் செலுத்தி வந்தேன். இச்செய்கைத் தவறான தாயிருந்த போதிலும் என் மட்டில் நல்லதாகவே கருதப்பட்டது. படித்துப் படித்து என்னுடைய மூளையும், சரீரமும் மிக்க க்ஷீண தசையை அடைந்தன. நான் ஒன்றுக்கும் உபயோகமில்லாமல் போய்விட்டேன். அதுமுதல் 18 வயது வரையில் நான் சரியாயிருந்த நாளே கிடையாது. அந்த வயதில் எனக்கு வாதநோய் ஏற்பட்டுக் கீல்களெல்லாம் பிடிக்கப்பட்டு மிக்க வருத்தத்திற்கு ஆளானேன். வைத்தியர்கள் என்னைக்கைவிட்டனர். ஆனால் ஒருநாள் ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்தேன். பிராண வாயு என்ற ஒரு பொருள் இருப்பதென்பது என் புத்திக்குத் தோன்றிற்று. அது சாஸ்திர புராணங்களில் கூறியிருக்கும் ஒருவிதமான கற்பனை யல்லவென்றும், உண்மையான ஒரு வஸ்துவென்றும் தெரிந்து கொள்வதற்குச் சக்தியில்லாமல் இதுவரைக்கும் அதற்காகத் தத்தளித்தேன்.


சுவாஸமே உயிர் "சுவாஸமே உயிர். அதனை அடக்கிக்கொண்டு சிறந்த வழியில் உபயோகிப்பதைக் கற்கவேண்டும். அதனால் உங்களுக்கு அசாத்தியம் என்பதே தோன்றாது. அதனை எல்லாருக்கும் கற்றுக்கொடுப்பதே என்னுடைய வாழ்நாளின் சங்கல்பமாயிருக்கிறது. நான் இய மனுடைய வாயிலிருந்து எப்படித் தப்பி வந்தேன் என்பதை எல்லாருக்கும் பின்னே தெரிவித்திருப்பதற்கு அதேகாரணமாகும்.மேலே