பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

குழந்தையும் இம்மாதிரி பூ, பூ, பூ என்று சொன்னால் என்னவாகும் என்பதை நன்றாகப்பரீட்சித்து அறிய விரும்பி அதற்கும் அம்மாதிரி கத்தும்படிக் கற்றுக்கொடுக்கப் பிரயத்தனப்பட்டேன். முதலில் அப்படிச் செய்ய முடியவில்லை. இரண்டு மணி நேரம் சொல்லிக் கொடுத்த பிறகு குழந்தையும் பூ, பூ, பூ என்று சொல்லத்தொடங் கிற்று. பிறகு அதற்கு அடிவயிற்றில் அதிர்ச்சி உண்டாயிற்று. “லா என்றால் இருதயத்தின் மேல் பாகத்திலும்; 'பூ என்னும் பொழுது வயிற்றிலும் நன்றாக அதிர்ச்சி ஏற்படுவதைப்பார்த்து எனக்கு ஆச்சரியம் உண்டாயிற்று. "லா என்று அடிக்கடி சொல்லும் பொழுது மாத்திரம் குழந்தையின் நரம்புகளெல்லாம் அதிர்ச்சி அடையக் கூடு மோ என்று எனக்குள் யோசிக்கத் தொடங்கினேன். ஒரு கால் அதனால் முக்கியமான நரம்புப் பிரதேசங்களுக்கு அதிர்ச்சி ஏற்படக் கூடும் என்றும், அப்படியானால் அதனால் மிக்க பலனை அடையலாம் என்றும் எனக்குத் தோன்றிற்று. இரண்டு விஷபங்கள் வெளிப்படையாயின. அதாவது: (1) குழந்தைக்கு உல்லாசம் ஏற்பட்டு அத்துடன் இந்த ஸ்வரமும் உச்சரிக்கப்பட்டதென்றும், (2) அவ்வுச்சாரணையுடன் கூட அதிர்ச்சியும் சாதாரணமாக ஏற்பட்டிருக்க வேண்டுமென்பதே. இவ்விஷயங்களில் சிறிதும் சந்தேகம் ஏற்பட வில்லை. அன்றியும் குழந்தையானது மூச்சை எடுத்துக்கொள்வதற்காக நில்லாமல் "லாலா என்று ஒரேவித மாகக் கத்திக்கொண்டிருந்தது. சுவாச கோசங்கள் காலியான பிறகு சுவாசத்தைப் பூர்த்தியாக எடுத்துக்கொண்டு மறுபடியும் "லாலா" என்பதற்குச் சித்தமாயிற்று. இதனால் இரண்டு பலன்கள் காணக் கிடைத்தன. (1) சுவாஸ கோசங்களில் காற்றானது அதிகமாக நிற்கத்தொடங்கிற்று. (2) வயிற்றின் தசைநார்களும் வபையும் (Diaphragm) ஒரே சமமாகக் குறுகத்தொடங்கின. குழந்தையைப்பின்பற்றினது. உடனே நான் எல்லாவிதமான உயிரெழுத்துக்களையும் (Vowels) உச்சரித்துக்கொண்டு அவற்றால் என்ன பலன் ஏற்படக்கூடும் என்பதைச் சொந்த அனுபவத்தினால் அறிந்து கொள்ள முயன்றேன். என்படுக்கையின் மேல் குழந்தையைப் போலப் படுத்துக்கொண்டு "ஆ, ஈ, ஊ முதலிய எல்லா ஸ்வரங்களையும் ஒவ்வொன்றாகச் சில நிமிஷங்கள் வரையில் உச்சரித்துக்கொண்டிருந்தேன். நெடுநேரம் வரைக்