பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

எடுத்துக் கொள்ளுங்கள். தேகப் பயிற்சி வழக்கமாயில்லா விட்டால் உங்கள் தலையானது சுழலும். பிராண வாயுவானாது (oxygen) அதிகமாக சுவாஸ கோசங்களுக்குப் போய்ச் சேருவதனால் தலையானது சுழலும். இப்படித் தலை சுற்றுவது தேகப் பற்றினுடைய பலன் என்று யாராவது சொன்னால் அதைச் சிறிதும் நம்பாதேயுங்கள். இது சுவாஸ உச்சுவாசங்களுடைய மாறுதல் என்பதை நன்றாகக் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஸ்வர உச்சாரணையும் சுவாஸத்தைக் கிரமப்படுத்துவதும் ஆக இவ்விரண்டும் சேர்ந்தால் தான் சிறந்த பலன்கள் ஏற்படும். இது வேறுவிதமான சுவாஸக்கிரமத்தைக் காட்டிலும் மிக்க பலனைத்தரும். இதனால் நரம்புப்பிரதேசங்க ளெல்லாம் சுறு சுறுப்பையும் இரத்த வோட்டத்தையு மடைந்து பிராணேந்திரியங்களின் வேலைகளைச் சரிவர நடத்தும். நம்முடைய சரீரமும் மனதும் எவ்வளவோ சாந்தமாகிருந்த போதிலும் கர முஷ்டிகளை மடித்துப்புருவங்களை நெறித்துக்கொண்டு பார்த்தால் சாந்தமானது நீங்கி கோபமானது. உண்டாகும். முகம் சிவக்கும். இருதயம் வேகமாக அடித்துக்கொண்டு இரத்த வோட்டமானது மாறுதலடையும். அவ்விதமே சிரிப்புண்டாகும் வண்ணம் உதடுகளை மடித்துக் கொண்டு கண்களைச் சிமிட்டினால் நம்முடைய மனோபாவமானது மாறும். இப்படியே பிரீதி, சந்தோஷம், பயம், விசனம் முதலியவைகள் ஏற்படும்படிச்செய்து கொள்ளலாம். நம்முடைய அபிப்ராயங்களையும், மனோபாவங்களையும் காண்பிப்பதற்காக நாம் உபயோகிக்கும் பாஷைக்கு, "ஆ, ஈ, ஐ., ஓ, ஊ என்ற இந்த ஐந்து உயிரெழுத்துக்களே ஆதாரம். ஆகையால் மனோவிருத்தி யைத் தோற்றுவிக்கவல்ல ஒவ்வொரு சப்தமும் நரம்புப் பிரதேசங்களின் மேல் ஒரு தெரிந்த மாறுதலை யுண்டாக்கும். பிடீல் (Fiddle or Violin) மனிதனுடைய குரலை ஒத்திருப்பதால் அது சனங்களுக்கு மிக்க விருப்பமான வாத்தியமாயிருக்கிறது. அது ஸ்வரசப்தங்களை நன்றாகத் தெரிவிக்கவல்ல உபாயத்தால் செய்யப்பட்டிருப்பதேயன்றி வேறு என்ன? பிடீலினின்றும் புறப்படுங்குரலானது நானா அதிர்ச்சியின் தன்மையே தவிர வேறு என்ன? அதைப் போலவே நீங்களும் கூட உங்களுடைய சொந்த கண்டத்தினின்றும் ஆராய்ந்த ஸ்வரங்களைப் புறப்படும்படிச்செய் தால், அதனால் உங்கள் சரீரத்தின் மேல் ஏற்படும் மாறுதல் இவ்வளவே என்பதை யாரால் கூற சாத்தியமாகும். சில இராகங்களைச் சொல்லுங்கால் நாய், பாம்பு, மான் முதலிய பிராணிகள் செய்யும் செய்கைகளை எப்பொழுதாவது கவனித்திருக்-