பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

"ஏ ஸ்வரத்தினால் தொண்டை , குரல்வளை, உள் நாக்கு இவற்றின்கண் உள்ள அழுக்குகள் நீங்கி இவைபலத்தையடையும். பாடகர், (Songster) உபாத்தியாயர் முதலியவர்களுக்கு இதனால் மிகுந்த குணம் உண்டாகும். இது கழுத்து நரம்புகளுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும். நெடுங்காலமாக கண்டமாலையென்னும் வியாதியால் வருந்துபவர்கள் இந்த அப்பியாசத்தை விடாமல் செய்துவந்தால் அவ்வியாதியானது உடனே அழிந்து போகும். "ஆ ஸ்வரத்தினால் மேல் மூன்று பக்க எலும்புகள் தூக்கப் பட்டு ஆகாரக்குழாய், மூளை இவைகளுக்கு அதிர்ச்சியுண்டாகும். இருதயரோகத்தினாலும், க்ஷயரோகத்தினாலும் வருந்துபவர்களுக்கு இதனால் மிக்கபலன் உண்டாகும். எப்பொழுதும் குனிந்து கொண்டு வேலை செய்பவர்களுக்கும், காற்றில்லாத அறைகளில் வாசஞ்செய்பவர்களுக்கும் இது மிகவும் அவசியமானது. இந்த அப்பியாசத்தைத் தொடங்குபவர்கள் 'ஊ முதலிய ஸ்வரங்களை, சாப்பிடுவதற்கு முன் ஒவ்வொன்றையும் ஐந்து தரம் செய்யவேண்டும். பலஹீனர்கள் மூன்று தரம் செய்தால் போதும். சிறிது வழக்கமான பிறகு "ஈ 'ஏ 'ஆ முதலிய ஸ்வரங்களை வழிக்குக் கொண்டு வரவேண்டும். இவைகளின் உச்சாரணையினால் எல்லாஜனங்களும் பிரயோஜனத்தை அடையலாம். அத்தியாயம் 9. சில சந்தேகிகளுக்கு மறுமொழிகள் :- (Replies to Sceptics) பேஷ்வாக்களுடன் பாபு கோகலே, பாவனராவ் பிரதிநிதி, மஹதாஜிசிந்தியா முதலிய சூரவம்சத்தினர் க்ஷீணிக்கத் தொடங்கினர். இவர்களுக்குப்பதில் சர்க்கார் வேலைக்காரர்களுடைய சந்ததிகள் தோன்ற ஆரம்பித்தன. இவர்களுடைய பயிற்சியும், ஐதிகமும் இவர்களுடைய முன்னோர்களுக்கு நேர் விரோதமாயிருந்தன. இப் புதுவம்சத்தினர் தங்களுடைய மக்கட்களுக்கு ஆரோக்கியத்தை விட்டு, பரீட்சைகளில் தேறும் விஷயத்தையும், சர்க்கார் வேலையில் சேரும் விஷயத்தையும் கடைப்பிடித்து வரும் வழிகளைக் கற்பிக்கத் தொடங்கினர். தங்கள் குழந்தைகளாகிலும் தங்கள் பக்கத்தவர் குழந்தைகளாகிலும் நல்ல பலாட்டியராய் வளர்ந்து வந்தால்