பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அவமதிப்பான பேச்சுகளையுஞ் சேர்த்து அவர்கள் நம்முடைய வேத சாஸ்திரங்களையும், அவற்றின் கொள்கைகளையும் நிந்தித்து நடக்கின்றனர். மேல் நாட்டாரது நாகரிகங்களை யனுசரிப்பதால் இம்மாதிரி யான துர்ப்புத்திகள் உண்டாகின்றன. ஆனால் மந்திரசாஸ்திரத்தில் முழு நம்பிக்கையுடன் பதஞ்சலி யோக சூத்திரம் முதலிய வற்றை நன்றாகப் பரிசீலனை செய்துள்ளவருங்கூட நவீன வைத்திய சாஸ்திரமுறையில் அவைகளை ஜனங்கள் ஒப்புக்கொள்ளும் வகையில் போதிக்கச் சக்தியற்றவராயினர். தற்காலத்தில் மேல் நாட்டார்கள் நம்முடைய சாஸ்திரங்களைப் பரிசீலனை செய்து, அவைகளின் விஷயமாய் அநேக நூல்களை எழுதியிருக்கின்றனர். நம்ம மஹரிஷிகளின் மகிமையை அவர்களின் மூலமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியதாயிருக்கிறது. ஜபதபங்களின் அவசியமும், பீஜமந்திரங்களால் தேகத்திற்கும், மனதிற்கும் ஏற்படத்தக்க பிரயோஜனங்கள், இவைகளெல்லாம் மேல் நாட்டார் மூலமாக அறிந்து கொண்டு நாம் நம்ம ரிஷிகளைப்புகழ வேண்டியதா யிருக்கின்றது. நம்மரிஷிகளுக்கு ஒருவிதமான எந்திரங்களின் உதவி இல்லா திருந்தபோதிலும் அவர்கள் கண்டுபிடித்திருக்கும் விஷயங்கள் இப்பொழுதும் மிக்க ஆச்சரியத்தைத் தரத்தக்கவையா யிருக்கின்றன. அவைகளுள் முக்கியமான சிலவற்றை அடியில் குறிப் பிட்டிருக்கிறோம். (1) கி.மு. 3000 வருஷங்களுக்கு முன் எழுதப்பட்டுள்ள அதர்வணவேதத்தில் மூத்திர கோசத்திலிருந்து மூத்திரத்தை எடுக்க வல்ல ஆயுதத்தின் விஷயம் கூறப்பட்டிருக்கின்றது. ரிக்வேதத்தின் காலத்தவராகிய ஒரு இரணவைத்தியன் ஒரு பெண் நடமாடுவதற்காக அவளுக்கு உலோகத்தினால் செய்த ஒரு காலை பொருத்தி யிருந்தான். (2) நம் முன்னோர்களுக்கு உயர்தரக்கணித சாஸ்திரமும் (Higher Mathematics) தெரிந்திருந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. (3) சோமனானவன் தக்கனுடைய 27 பெண்களையும் மணந்து கொண்டனன் என்ற ஒரு கதையைப் புராணங்களில் படிக்கலாம் அவர்களுள் நால்வர்களால் அங்காரகன், புதன், பிரகஸ்பதி, சுக்கிரன் முதலிய இந்நான்கு கிரகங்கள் தோன்றின என்று கூறப்பட்டிருக்கிறது. சுப்பிரசித்த ஜோ திஷனான பென்ட்லி (Bentley) என்பவன் இதன் அர்த்தம் என்ன வென்பதைச் சனங்களுக்குத் தெரிவிக்க வேண்டிய தாயிற்று. இந்த இராசிகளில் சந்திரனும் மேல் கண்ட கிரகங்களுடன் சேர்ந்திருந்தான், கி.மு. 1424 முதல் 1423 வரையில்