பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

16 மாதங்களில் இந்த கூட்டங்கள் ஏற்பட்டன வென்பதே புராண கதைகளின் அபிப்பிராயம். இதை ஹைண்டுமான் (Hindman) என்பவன் உறுதிப் படுத்தியுள்ளான். (4) மகா அலக்சாண்டர் இந்தியாவிற்கு வந்திருந்த காலத்தில் பாம்பு கடித்தவரைக் குணப்படுத்தும் வைத்தியர்கள் பஞ்சாபில் இருந்தன ரென்றும், கிரேக்க வைத்தியர்களுக்கு இச்சாமர்த்தியம் இருக்கவில்லை யென்றும் கிரேக்க சரித்திரத்தினால் தெரிய வரு கின்றது. எங்கள் வார்த்தையிலேயே நம்பிக்கைவைத்து எல்லாகாரியங்களையும் வாசகர்கள் செய்யவேண்டும் என்று நாங்கள் கோருவதில்லை. ஒவ்வொருவரும் சூர்ய நமஸ்காரங்களை பீஜ மந்திரங்களுடன் எளிதாகச் செய்ய முடியும். சில தினங்கள் செய்து பார்த்தால், எல்லாம் அவர்களுடைய சொந்த அனுபவத்திற்குத் தோன்றும். பெண்கள் மக்கள், கிழவர் முதலியவர்களுக்கும் தேகப்பயிற்சி தேவையோ என்று சிலர் அடிக்கடி கேட்கிறார்கள். அன்றியும், மந்திரங்களினால் உண்மையான பலன் ஏதாவது ஏற்படுமோ, சூர்யனிடம் நம்முடைய மனதைச் செலுத்தவேண்டுமோ என்ற இவை போன்ற வினாக்களைக் கேட்கிறார்கள். அவைகளுக்கெல்லாம் இப்பொழுது விடையளிக்கிறோம். பெண்களுக்கு தேகாப்பியாசம். பெண்களுக்குத் தேகப்பயிற்சி அனாவசியம் என்று சொல்லுபவர், இந்தியா தேசத்துக் கவிச்சிரேஷ்ட னொருவன் சொல்லியிருப் பதை நினைப்புக்குக் கொண்டுவர வேண்டும். ஸ்திரீகளாகிய தாய்மார்கள், ரணதீரர்களையும், மகாத்மாக்களையும் கொடுக்கத்தக்க சுரங்கம் என்று கபீர் பாடியிருக்கிறார். இப்படிப்பட்ட தாய்கள் பலஹீனராயிருந்தால் அவர்களிடம் ஆரோக்கியமாயும் பலமாயும் உள்ள சிரஞ்சீவிகள் எப்படிப் பிறப்பார்கள்? பெண்களெல்லாம் பலமும் ஆரோக்கியமுங் கூடிய தாய்களாக ஆகவேண்டும் என்ற எண்ணத்தைக் கொள்ள வேண்டும். தாய்களாவதே தேவரிடமிருந்து பெண்கள் அடைந்திருக்கும்படியான பெறும்பேறாகும். அவர்களுக்குப் பலமும் ஆரோக்கியமும் இல்லாதிருப்பதால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பலமற்றவையாயும், ரோகிகளாயும் இருக்கும். "ஒரு தேசத்து ஜனங்களுடைய திடசக்தியின் நிலைமையானது அத்தேசத்துப் பெண்களுடைய சரீரபலத்தின் மேல் நிற்கின்றது என்று டாக்டர் ஜோனாஸ் ஸ்லையுபஸ் (Dr. Jonas Slipus) என்பவர் 1927ஞத்திய ஏப்ரல் மாதம் 9-ம்தேதிய "தி ஓவர்சீஸ் டெயிலி