பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

களுக்கும் யுவதிகளுக்கும் மிக்கபிரயோசனம் ஏற்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. 50-வருஷத்திய வயதுடைய ஸ்திரீகளுங்கூட சிறிதுகாலம் இந்நமஸ்காரங்களைச் செய்து திரும்பவும் இளமைப் பருவத்தையடையலாம். இந்தியா தேசத்திலும், ஐரோப்பா, அமெரிக்கா முதலிய கண்டங்களிலும் தேகப்பயிற்சியைப் பற்றியும், சந்தான சாஸ்திரத்தைப்பற்றியும் அநேகப் புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவைகளைப்படிப்பவர்களுக்குச் சரீரப்பயிற்சியின் ஆவசியகம் நன்கு விளங்கும். ஆனால் ஸ்திரீகளின் விஷயத்தில் இச் சாதனைகளில் சிலமாறுதல்கள் அவசியமாகின்றன. உயிருக்காதாரமான பரிமாணத்தின் அளவு (Vital CapacityLimited).

தேகப்பயிற்சியினால் இருதயம் துர்பலம் அடையுமென்றும், அஜீர்ணம் ஏற்படுமென்றும் நம்மவர்களில் பெரும்பாலர் கருதுகிறார்கள். அன்றியும் தேகப்பயிற்சி செய்பவரும், மல்லயுத்தம் செய்பவர்களும் அகாலமரணமடைகிறார்கள் என்றும் நினைக்கிறார்கள். ஆனால் இத்தகையவர்களுக்கு நாம்கூறுவது யாதெனில், சூரிய நமஸ்காரம், தேசப்பயிற்சி முதலியவை செய்வதால் இவை ஒன்றும் ஏற்படுகிறதில்லையென்பதே. நம்ம பயில்வான்களுக்குள் 400 தண்டால்களைச் செய்பவனைக்காட்டிலும் 500 தண்டால்கள் செய்பவனே மிகவும் பலவானாகவும் ஆரோக்கியவானாகவும் இருப்பான் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. இதனால் அவர்கள் தங்கள் சக்தியை மீறிச் சாதனைகள் செய்து சரீரத்தைக்கெடுத்துக் கொள்ளுகிறார்கள். அஜீர்ணத்தினால் இறப்பவர்களுடைய தொகையோ அதிகமாயிருக்கின்றது. ஆகாரத்தை அதிகமாக உட்கொண்டால் பலம் அதிகமாகும் என்ற மூடநம்பிக்கையினால் சில பயில்வான்கள் இம்மாதிரி செய்கிறார்கள். சக்தியும், இளமைப்பருவமும் இருக்கும் வரையில் எல்லாம் சரியாயிருக்கும். ஆனால், கிழத்தனம் நெருங்கித்தங்களுடைய சாதனைகளைக் குறைக்கவேண்டிய தவசியமென்று அவர்களுக்குத் தோன் றியவுடனே, தங்களுடைய உணவைக்குறைத்தல் மிகவும் முக்கிய மென்பது அவர்களுக்குத் தோன்றுவதில்லை. தேகப்பயிற்சியினால் ஏற்படும் துன்பங்களுக்குக்காரணம் உணவைக்கிரமப்படுத்தா திருப்பதேயாகும். தேகப்பயிற்சி யாதொரு துன்பத்தையுங் கொடுக்காது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம்' என்பது நாம் அறிந்துள்ளதே.