பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

"வியாயாமம் என்ற பரோடா தேசத்து மாதப்பத்திரிகையில் 1925 மார்ச்சு மாத சஞ்சிகையில் கேப்டன் பணீந்திர கிருஷ்ண குப்தரென்பவருடைய சரித்திரச்சுருக்கம் எழுதப்பட்டுளது. அவர் தன்னுடைய எதிரிகளாகிய மல்ல யுத்தக்காரர்களை மீறவேண்டு மென்ற பிரயத்தனத்தில் இதரர்களைப் போலவே உணவுகளை யதிகமாக உட்கொள்ளவாரம்பித்தார். அதனால் அவருக்கு அஜீரணம் ஏற்பட்டது. இப்பொழுது அவர் நாள்தோறும் 2000 தண்டால்களைச் செய்துவருகிறார். ஆனால் உணவு கொள்வதைச் சரிப்படுத்தி யிருக்கிறார். சாமான்னிய ஜனங்களைப் போலவே சிறிது சோறு, பருப்பு, சிறிது மீன் முதலிய இவைகளை மாத்திரம் எடுத்துக்கொள் ளுகிறார். இந்த மல்லபுத்தக்காரர்கள் ஆகாரம் தேகாப்பியாசம் முதலியவைகளை அளவுகடந்து செய்வதனால் அகாலமரணத்திற்காளாகிறார்கள். இக்காரணத்திற்காகவே நம்மபூர்வீகர் சூர்ய நமஸ்காரங்களுடன் பீஜமந்திரங்களையும் வேதமந்திரங்களையும் சேர்த்திருப்பது. இந்த மந்திரங்களினால் வியாதிகள் வராமல் தடையா யிருப்பதல்லாமல் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும் நோய்கள் குணமடைந்து சிரமத்தை யொழிக்கும். சரியாகச் செய்தால் 25 நமஸ்காரங்களுக்கு (ஒரு சுற்று) 7 அல்லது 8 நிமிஷங்களுக்கு மேல் பிடிக்கிறதில்லை. ஆகையால் திகிலடைந்திருப்பவர்களும், பத்திராதிபர்களும் தைரியத்துடன் சூர்ய நமஸ்காரங்களைச்செய்து பார்க்கட்டும். அவர்களுக்குப்பலமும் ஆண்மையுங் கூடிய யௌவனமும், உற்சாகமுள்ள மூப்பும் இவ்விரண்டைக் காட்டிலும் அதிகமாக ஆரோக்கியத்துடன் கூடிய புத்திர சந்தானத்தையுங் கொடுக்கும் என்று நாங்கள் உத்திர வாதம் கொடுப்போம். ஞானத்தைப் பிரசித்தி செய்தல். சில தர்ம மார்த்தாண்டர்கள் பீஜா மந்திரங்களையும், வேத மந்திரங்களையும் சூத்திரர்களுக்குத் தெரியப்படுத்துவது மிகவும் பாபகரமான காரியமென்று எங்களைத் தூற்றுகிறார்கள். ஜர்மனி, பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா முதலிய தேசங்களின் பண்டிதர்கள் நம்ம வேதங்களை யெல்லாம் நன்றாகப் பரிசோதனை செய்து வருங்கால் அவைகளை நம்முடைய சொந்த ஜனங்கள் அறிந்து கொள்ளா திருக்கும் பொருட்டு இரகசியமாக வைத்துக்கொள்வது உசிதமன்று. சாஸ்திரங்களில் பலமான மந்திரங்கள் அநேக மிருக்கின்றன.