பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆனால் தக்க தைரியத்துடனும், சாகஸத்துடனும் யுக்தமான சிட்சா கிரமத்துடன் சாதிப்பவர்களுக்கு மாத்திரமே அவைகளின் பலன் ஏற்படும். மொழிகளையும், எழுத்துக்களையுங் கற்றுக்கொள்வதனால் குணம் என்ன? ஜீவனத்தில் எப்படியோ அப்படியே தேகாப்பியாசத்திலும் நம்முடைய பிரயத்தனத்திற்குத் தக்க மட்டும் பலன் நமக்குக் கிடைக்கும். முன்காலத்தில் பிராமணர்கள் பிரயத்தன பூர்வமாய் ஞானமார்க்கத்தின் இரகசியங்களை யெல்லாம் பிராமணரல்லாதாருக்குத் தெரிவிக்காமல் வைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற வதந்தி யிருக்கின்றது. இது நிஜமோ, பொய்யோ, பொருத்தமானதோ, பொருத்தமில்லாததோ என்பதை இங்கு விவரிப்பது அநாவசியம். நம்முடைய பிராமணரல்லாதாராகிய சகோதரர்களெல்லாம் சூர்ய நமஸ்காரங்களைச் செய்யவேண்டு மென்பதே எங்களுடைய உண்மையான விருப்பமா யிருக்கின்ற தென்பதை நாங்கள் வாசகர்களுக்குத் தெரிவிக்க இச்சைப்படுகிறோம். லெஸ்ஸர் லாசிரியோ முதலிய இதர தேசத்துப் படிப்பாளிகள் தங்களுடைய சொந்தமான பரிசீலனைகளால் ஸ்வர அட்சரங்கள் அல்லது பீஜமந்திரங்களின் சாரங்களை யெல்லாம் கிரகித்துக்கொண்டிருக்கும் பொழுது நம்முடைய ரிஷிகளின் தத்வங்களை நம்முடைய ஜனங்களுக்குத் தெரிவிக்கா திருப்பது மிகவும் முட்டாள் தனம் என்பதைப் பிராமணர்கள் மனதில் கருதவேண்டும். நல்ல அஸ்திவாரங்களைப் போடுவது. இக்காலத்தில் பாலகர்களுக்கும், பெண்களுக்கும் சரியான தேகப்பயிற்சி தேவையா யிருப்ப தென்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை. இளமைப் பருவத்திலேயே சரியான தேகப்பயிற்சியினால் ஆரோக்கியகரமான அஸ்திவாரங்களைப் போட்டு, ஆரோக்கியகரமான அப்பியாசங்களை யேற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாமல் வியாதிகளுக்கு ஈடாகி, காலத்தை மீறித் தேகப்பயிற்சி செய்ய வாரம்பித்துக் குணத்தை யடையாமல் எல்லாவற்றையும் நிந்திப்பதில் சிறிதும் பிரயோஜனமில்லை. கிழத்தனத்தை நிறுத்திவைப்பது. சூர்ய நமஸ்காரங்களின் விஷயத்தில் பின்னே விவரித்திருக்கும் படியான முறைகள் சாதாரணமாய் வயதானவர்களுக்கு ஒத்துக் கொள்ளுகிறதில்லை. ராவ் பகதூர் தேவலால் (Rao Bahadur Devalal) என்பவரைப்போன்ற சுமார் 80 வயதான கௌரவ பெரிய மனிதர்களும் இருக்கின்றார்கள். இவர்கள் உணவு முதலியவை