பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

களில் மிதமாகி இருந்து இதரார்களுடைய நன்மைக்காக உழைத்து இந்த விருத்தாப்பிய தசைக்கு வந்திருக்கிறார்கள். இப்பேர்ப்பட்டவர்களால் உலகத்திற்கு நன்மை ஏற்படும். ஆகையால் மிதமாய் சூர்ய நமஸ்காரங்களைச் செய்து உயிர் வாழ்க்கையை யதிகப்படுத்திக் கொள்ளும்படி இத்தகையவர்களை நாங்கள் வேண்டிக் கொள்ளுகிறோம். நெருக்கமான இடங்களில் யத்தனமின்றி வாசஞ்செய்வது, சுரம், உயிர்ச்சேதம் (இழப்பு - Bereavement) முதலிய நானாவிதமான துன்பங்களினால் பலாத்காரமாகக் கிழத்தனத்தை யடைந்தவர்களு மிருக்கிறார்கள். அப்பேர்ப்பட்டவர்களுக்குச் சூர்ய நமஸ்காரங்களால் மிக்க பிரயோஜனம் ஏற்படும். அவைகளால் சரீரத்திற்கு மாத்திரமேயன்றி மனதிற்கும் ஒருவித கிளர்ச்சியேற்படும். துராசாரம், துர்நடத்தை முதலிய வற்றால் தங்களுடைய வயதையும், ஆரோக்கியத்தையும் கெடுத்துக்கொண்டு, சரீரத்தையும் நாசப்படுத்திக் கொண்டு வைத்தியர்களாலே கைவிடப்பட்டவர்களும் இருக்கிறார்கள். இக்கிழவர்களும் கூட நாங்கள் கூறுவதைக் கேட்டுச்சரியாய் சூர்ய நமஸ்காரங்களைச் செய்தால் ஆரோக்கிய பாக்கியத்தை யடைவார்கள். சரியான தேகப்பயிற்சியினால் கிழத்தனத்தை விலக்க முடியும். கிழத்தனம் ஏற்பட்டாலும் கூட தேகப் பயிற்சியினால் சிறிதளவு இளமைப் பருவத்தை யடையலாம். எத்தகைய தேகப்பயிற்சியை எவ்வளவு வரைக்கும் செய்ய வேண்டுமென்பது அவரவர்களின் சரீரத்தின் தன்மையைப் பற்றியது. நல்ல இரத்தம், சரியான இரத்தவோட்டம், சரியான நரம்புகள், சுலபமாய் மல மூத்திரங்களின் விசர்ஜனம் முதலிய இவைகள் ஏற்படவேண்டுமானால் எதாவதொருதேகப் பயிற்சியைத் தினந்தோறும் செய்து கொண்டிருக்கவேண்டும். அதிலும் வயதானவர்கள் தினம் நடந்து கொண்டும், சுவாச உச்சுவாசங்களைச் சரியாகச் செய்து கொண்டும், முதுகெலும்பை நன்றாக நீட்டிக் கொண்டும் இருப்பது மிகவும் நல்லது. என்று பர்னார் மெக்பாடன் என்பவர் 1926 ஹத்திய நவம்பர் மாதத்து பிசிகல் கல்சர்' என்னும் பத்திரிகையில் மேல் கண்டவாறு எழுதியிருக்கிறார். சூரியனால் ஏற்படத்தக்க பிரயோசனங்கள். மந்திரங்களென்றாலென்ன? தந்திரங்களென்றாலென்ன? அவைகளால் எள்ளளவு பிரயோஜனமுமில்லை என்று இக்காலத்து சனங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்ச நாளைக்கு முன்னே ஒரு கனவானானவர் எங்களுக்குச் சொன்ன தாவது, மந்திரங்களில்