பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

எனக்கு நம்பிக்கையில்லை. நமஸ்காரங்களைச் செய்யும் பொழுது நான் அவைகளைச் சொல்லுவதில்லை - என்பதே. சூர்பனுக்கு எதற்காக நமஸ்காரங்களைச் செய்ய வேண்டு மென்கிறவர்களு மிருக்கிறார்கள். இவர்கள் மேற் கூறப்பட்டுள்ள லெஸ்ஸர் லாசிரியோ என்பவருடைய நூல்களைப்படித்தல் நலம். அன்றியும் ஜர்மனிதேசத்து சாஸ்திரஞ்ஞரும் நாஸ்திகருமான எர்னெஸ்டு ஹேகல் (Ernest Haeckel) என்பவர் 'தி ரீடில் ஆப் தி யூனிவர்ஸ் (The Riddle of the Uuiverse) என்ற தன்னுடைய புத்தகத்தில் பின்வருமாறு எழுதி யிருக்கிறார்: - "சூரியனிடமிருந்து நமக்கு வெளிச்சமும், உஷ்ணமும் கிடைக்க வேண்டியதாயிருக்கின்றது. பிராணிவர்க்கத்திற்கெல்லாம் சூரியனே ஆதாரமாயிருக்கிறான். ஆஸ்திகமதத்தின் ரூபங்களிலெல்லாம் சூர்ய உபாசனையே சிரேஷ்டமானதென்று நவீன சாஸ்திரிகளுக்குத் தோன்றுகின்றது. பூமியானது சூர்யனிடமிருந்து புறப்பட்ட ஒரு துண்டு என்றும் பிறகு அது சூரியமண்டலத்திற்கே போய்ச் சேரும் என்றும் பூதிர்மாண சாஸ்திரத்தினால் தெரியவருகிறது. எல்லாவித தாது வஸ்துக்களைப் போலவே நமக்கும் சூரியன் ஆதாரமா யிருக்கிறான். ஆகையால் எல்லா உபாசனைகளைக்காட்டிலும் சூர்ய உபாசனையே மிகச்சிறந்தது. உண்மையாக, சூர்யனைப் பூஜை செய்யத்தக்கவர்கள் இதர ஆஸ்திகர்களைக்காட்டிலும் 1000 வருஷங்களுக்கு முன்னரே ஞானமார்க்கத்திலும் சிஷ்டாசாரத்திலும் மிக்க உன்னத பதவியிலிருந்தனர். 1881இல் நான் பொம்பாய் (Bom bay) பட்டணத்தில் இருந்த காலத்தில் பார்சிமதத்தினர் சூர்யனை உதயமாகும் பொழுதும் அஸ்தமிக்கும் பொழுதும். சமுத்திரக்கரையில் சூர்யனுக்குப் பூஜை செய்வதைப் பார்த்து எனக்கு மிக்ககளிப்பு ஏற்பட்டது. நம்போல்வார் நிஜமாக சூர்ய நமஸ்காரங்களைச் செய்யும் பொழுது மேல்கூறப்பட்ட கனவான் பார்த்திருந்தால் அவருக்கு இன்னும் அதிகமாகக் களிப்பு ஏற்பட்டிருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நம்முடைய சூர்ய நமஸ்காரங்களில் எல்லா தேவதைகளையும் விட்டு சூரியனை மாத்திரம் இஷ்டதேவதையாக எதற்காகச் செய்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு இன்னும் சில காரணங்களை அடியில் கூறுவோம். முதலாவது: தேகப்பயிற்சியினால் வியாதிகள் நீங்கவல்ல ஒளஷதங்களைக்காட்டிலும் சிறந்த தன்மை ஏற்படும் என்பதை வாசகர்கள் நன்றாகக் கவனிக்க வேண்டும். நெடுங்காலமாய் வைத்தியர்கள் மருந்து கொடுத்தே வியாதிகளைக் குணப்படுத்தத் தொடங்கி