பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆனாலும் இப்பூமியில் வியாதிகள் அடியோடு அழியும்படிச் செய்ய அவர்களால் முடிவதில்லை. அப்படிச் செய்ய முடியுமோ என்றால், முடியும் என்று நாங்கள் கூறுவோம். ஆனால் அதற்காக வைத்தியர்களும் ஆரோக்கிய சாஸ்திரக்காரர்களும், சர்க்காரைச் சேர்ந்தவர்களும், குடிகளும் ஒற்றுமையுடன் கூடி வியாதிகளின் மூலகாரணத்தைக்கண்டுபிடிக்க முயல வேண்டும். அப்படிச் செய்யுங்கால் அக்காரணத்தை அறவேயொழித்து திரும்பவும் ஏற்படாதபடி பார்த்துக்கொள்ளவேண்டும். சூர்ய நமஸ்காரங்களினால் இக்காரியம் நிறைவேறுமென்று நாங்கள் தைரியமாய் சொல்லுவோம். ஆனால் அவைகளை நாங்கள் கூறியுள்ள வழியில் கிரமமாகச் செய்யவேண்டும். (1) கார்டுனர் ரோனி (Gardner Roney) என்பவர் 1926y ஜூலை மாதத்து "பிசிகல் கல்சர் என்ற பத்திரிகையில் கூறியிருப்பது என்ன வென்றால் :- 'உங்களுடைய சரீரத்தை வெயிலினால் குளிப்பாட்டுங்கள் ; வியாதிகளைக் குணப்படுத்துவதில் வெயிலுக்குச் சமானமான ஒளஷதம் வேறு கிடையாது ; ஆரோக்கிய பாக்கியத்தின் சுரங்கம் சூரியனே. (2 வியாதிகளைக் குணப்படுத்தும் விஷபத்தில் அமெரிக்கா கண்டத்திலெல்லாம் மிக்க கீர்த்திவாய்ந்த டாக்டர். ஹெஸ் (Dr. Hess) என்பவர் கூறியுள்ளது என்னவெனில்:- எல்லா உணவுப் பொருள்களுக்கும் ஆதாரமாயுள்ள வெயிலே வியாதிகளைக்குணப் படுத்துவதில் முக்கியமாயிருக்கின்றது. அது ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது என்பதை ஜனங்களுக்கு நன்றாகத் தெரியப்படுத்தவேண்டும். அதனால் ஆரோக்கியமும் சந்தோஷமும் விர்த்தியாகும். (3) "விளையும் பயிர்களுக்கு வெயில் எவ்வளவு முக்கியமோ அப்படியே வளரும் குழந்தைக்கும்கூட (எல்லா ஜனங்களுக்கும்) அது மிகவும் முக்கியமான தாயிருக்கின்றது. அன்றியும் பிராணிகளுக்கும்கூட பயிர்களைப்போல வெயில் நேராகச்சர்மத்தின் மேல் விழவேண்டும். என்பதைக்கண்டு பிடித்தவரில் முதல்வரான டாக்டர் ரோலியர் (Dr. Rollier) என்பவருடைய கொள்கை என்னவென்றால்:- பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்குத் தேகப்பயிற்சி எவ்வளவு முக்கியமானதோ அப்படியே வெயிலில் காய்வதும் (குளிப்பது) கூட அவ்வளவு முக்கியமானதாயிருக்கிறது. வெகுவாக இவ்விரண்டையும் சேர்க்கக்கூடும். பிள்ளைகள் தங்களுடைய சரீரத்தைக்காற்றுக்குக் காட்டிக்கொடுத்து காலை இளவெயிலில் இளைப்பாறியும் தேகப் பயிற்சியைச் செய்தும் வரவேண்டும். அதனால் அவர்களுக்கு மிக்க