பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

17 வருஷங்களாக நான் யாதொரு வியாதியுமின்றி இருந்தேன். என்று சொன்ன படியால் என்னுடைய உயிர் வாழ்க்கையின் கிரமத்தை யறிந்து கொள்ள வேண்டுமென்ற விருப்பம் சிலருக்கு இருக்கக் கூடும். அவர்களுக்காக என்னுடைய விளம்பரப்பத்திரத்தை (Pro-gramme) அடியில் குறிபிட்டிருக்கிறேன் : காலை. 3-30 முதல் 4 மணி வரையில் படுக்கை விட்டெழுந்து சௌசம் ஸ்நாநம் முதலியவைகளை முடித்தல்.

  “	4 முதல் 5 மணி வரையில்- சூர்ய நமஸ்காரங்கள் 
  ”	5 முதல் 5-30 மணி வரையில் - பூஜை. 5-30 முதல் 6-15 மணி வரையில்-600 அடி உயரமுள்ள மலையின் மேல் ஏறிக் கீழிறங்குதல். 7 முதல் 9-30 மணி வரையில் - கடிதங்களைப் பார்ப்பது, வர்த்தமான பத்திரிகைகளைப் படிப்பது. 
   ”     9.30 முதல் 10-30 மணி வரையில் சித்திர மெழுதுவது. ,, 10-30 முதல் 11-30 மணிவரையில்- போஜனம். 
    “ 	11-30 முதல் 12-30 மணிவரையில் வாசித்தல். பகல். 
               “	12-30 முதல் 1-30 மணி வரையில் படுப்பது. 
     “	1-30 முதல் 3மணிவரையில் எழுதுதல், படித்தல் முதலியன. 3 முதல் 4-30   

மணி வரையில் சமஸ்தானத்து விஷயமான காரியங்களைக் கவனிப்பது. மாலை. 4-30 முதல் 5 மணி வரையில் சிற்ப வேலைகளை மேல் பார்வை செய்தல். “ 5 முதல் 6 மணி வரையில் --கீர்த்தனை - வகுப்பு , 6-30 முதல் 7-30 மணி வரையில் - இராப்போஜனம். இரவு. 7-30 முதல் 8.30 மணி வரையில் படிப்பது, இராணியாருக்கும் மக்கட்கும் மஹாராஷ்டிரம், சமுஸ்கிருதம் முதலியவைக் கற்றுக்கொடுத்தல். , “ 8-30 முதல் - விடியற் காலம் 3-30 மணி வரையில்-தூக்கம். தலையணையின் மேல் தலை சாய்த்துக் கொண்ட ஐந்து நிமிஷத்திற்குள் நல்ல தூக்கம் வரும். நான் கனவு காண் பது மிகவும் அரிது. திடமான ஆரோக்கியம், காரியஞ் செய்வதற்கு உற்சாகம் வியாதிகள் வராதிருப்பது, தீர்க்காயுள் முதலிய இவைகள் ஏற்படவேண்டுமானால் தினமும் தேகப்பயிற்சி செய்வதுடன் சாதாரணமான உணவை மிதமாக உட்கொள்ள வேண்டும்,