பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இரண்டு கோப்பை நுரையுடன் கூடிய கறந்த பசுவின்பாலும், தேனுடன் கலந்த ஆடையும் நான் காலையில் உட்கொள்கிறேன். பகற்போசனம். நெல்லினுடைய மேல் உமி நீக்கப்பெற்ற அரிசியினால் செய்யப் பட்ட சோறு (சுமார் 20 தோலா எடை); உமியுடன் அரைக்கப்பட்ட கோதிமாவினால் செய்த ஒன்று அல்லது பாதிரொட்டி (இதுவும் சுமார் 10 தோலா எடை) சிறிது பருப்பு; அம்டி, வேகவைக்காத காய்கறிகள்; வெந்தகறிகள் - இவற்றிற்குக் குழம்பு முதலியவற்றைச் சேர்த்துக் கொள்ளுகிறதில்லை. சிறிது பால், தயிர், மோர், நெய், மோர்க்குழம்பு, அவ்வப்போது சில பழதினுசுகள். இராப்போசனம். பகற்போசனத்தைப் போலவே, ஆனால் குறைச்சலாக உட் கொள்ளுகிறேன். அவ்வளவு தினுசுகளுமிருப்பதில்லை. பழங்கள். கிடைக்கும் பொழுதெல்லாம், மாம்பழம் கொய்யாப்பழம் மாதுளம்பழம், திராட்சைப்பழம் அனாசுப்பழம் அத்திப்பபழம் கிச்சிலிப் பழம், பாதாமி, கொப்பரை, படாணி முதலியவைகளைச் சாப்பிடும் பொழுது கூட எடுத்துக்கொள்ளுகிறேன். ஆனால் அச்சந்தர்ப்பங்களில் சோறு, ரொட்டி முதலியவற்றைக் குறைத்துக் கொள்ளுகிறேன். நெய் அல்லது எண்ணையினால் செய்த பதார்த்தங்கள் ஒன்றையும் நான் எடுத்துக்கொள்ளுகிறதில்லை. நீர்க்குடிப்பது. புதியதாகக் கிணற்றிலிருந்து சேந்தப்பட்ட நீரைக் குடிக்கிறேன். இந்நீரில் வாசனைக்காக ரோஜா, மல்லி முதலிய புஷ்பங்களைப் போட்டுவைக்கிறேன். சாப்பிடும்போது நீரைக் குடிப்பதேயில்லை. சாப்பிட்டு ஒரு மணிநேரமான பிறகு குடிக்கிறேன். நடுவில் தாகம் ஏற்பட்டால் நீர் குடிக்கிறேனே யொழிய வேறொன்றையுந் தின்னுவ தில்லை . உத்தீபனஞ்செய்யும் பதார்த்தங்கள். டீ, காபி, கோகோ, புகையிலை முதலிய ஒன்றையும் உபயோகிப் பதில்லை. பர்னார் மெக்பாடன் என்பவர் கூறும்படி, உங்களுடைய ஆரோக் கியத்தையும் பலத்தையும் காப்பாற்றிக்கொள்வதற்கு நீங்கள் எவ்