பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

(4) சில சமயங்களில் இடுப்பில் வலி உண்டாகிக் கொண்டிருந் தது. இப்பொழுது ஒன்று மில்லை. (5) குழந்தையைப் பெற்றவுடன் ஏற்படும் பலஹீன ஸ்திதி இப்பொழுது ஏற்படுவதில்லை. (6) இப்பொழுது தன்னுடைய வயதுக்கு இருக்கவேண்டி யதைக் காட்டிலும் மிகவும் சிறியவளாகக்காண்கிறாள். ஸ்ரீமதி சௌபாக்யவதி சீதாபாய் கிர்லோஸ்கர் என்பவளுடைய அனு பவம். இவள் பீஜ மந்திரங்களுடனும், வேதமந்திரங்களுடனும் சூர்ய நமஸ்காரங்களைச் செய்வதற்கு 1925 ஜூலை 16தேதியில் தொடங்கினாள். தொடங்கி ஆறு மாதங்களுக்குள்ளே அடியிற் காணுங் குண விசேஷங்களை யவள் கண்டறிந்து கொண்டாள். (1) முதுகிலும், இடுப்பிலும் இருந்த வலி மாயமாயிற்று. (2) புஷ்பவதியாகி 35 வருஷங்களாக அதனால் ஏற்பட்டகஷ்டங்களெல்லாம் உடனே தொலைந்தன. கருப்பை வீங்குதல் முதலிய துன்பங்களும் நீங்கின. சூர்ய நமஸ்காரங்களைச் சரியாகவும் கிரம மாகவும் செய்தால் கருப்பையானது சரியான நிலைமைக்குவரும் என்று இதனால் தெரியவருகின்றது. (3) வாய்வு ரோகங்களெல்லாம் நின்று போயின. (4) சரீரத்திலிருந்து கொழுப்பெல்லாங் கரைந்து அவயவங்கள் திடமாகவும் இலகுவாயு மாயின. (5, தொடைகள், கால்கள், மார்பு இவைகளெல்லாம் பருத்துப் பலத்தையடைந்தன. (6) மார்பின் சுற்றளவு 2 அங்குலங்களதிகமாயிற்று. (7) இரத்தம் மிகவும் சுத்தமாகி சரீரத்தில் ஆரோக்கியத்தோற்றம் ஏற்பட்டது. நகங்களெல்லாம் செந்நிறமடைந்தன. (8) கூந்தல் உதிர்வது நின்றது. (9) வியர்வையின் துர் நாற்றம் நீங்கிற்று. (10) ஜீர்ணேந்திரியங்கள் வேலைகளைச் சரியாகச் செய்யத் தொடங்கின. (11) ஜலதோஷம், இருமல் அடிக்கடி ஏற்படவில்லை. ஸ்ரீமான். ஆர். கே. கிர்லோஸ்கரின் அனுபவம். இவர் பீஜ மந்திரங்களுடனும், வேத மந்திரங்களுடனும் சூர்ய நமஸ்காரங்களைத் தொடங்கி 5 வருஷங்களாயின. பிரதி தினமும்