பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அத்தியாயம் 11. ஒரு சமஸ்தானம் தேகப்பயிற்சியை அனுசரித்திருப்பது. சாமான்னியமாகதேகப்பயிற்சி எல்லாருக்குத் தேவையானதென்பதையும், இவ்விஷயத்தில் சூர்ய நமஸ்காரங்களே சிறந்தவை என்பதையும் எங்களுடைய அதிர்ஷ்டவிசேஷத்தினால் எங்களுடைய குடிகள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் . தவிரவும் அவர்கள் இந்நமஸ்காரங்களைச் சிரத்தா பக்தியுடன் கைப்பற்றி யிருக்கிறபடியால், ஒளந்து சமஸ்தானத்தின் பாட சாலைகளிலெல்லாம் சூர்ய நமஸ்காரங்கள் இன்றியமையாத அப்பியாசமாய் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் மாணவர்களுக்கும் அவர்களைச் சேர்ந்துள்ளவர்களுக்கும் சூர்ய நமஸ்காரங்களின் பிரயோஜனங்கள் உண்டாக வேண்டு மென்பதே எங்களுடைய இரகசியமான விருப்பம். சுவதேச அரசாங்கங்களின் (Indian states) வித்யா இலாகா அதிகாரிகளும், பிரிடிஷ் இந்தியா வித்யா இலாகா அதிகாரிகளும் எங்களுடைய முறையை யனுசரித்து இக்காலத்தவர்களுக்கும் இனிமேல் வரத்தக்கவர்களுக்கும் ஆரோக்கியமும், வல்லமையும், தீர்க்காயுளும் உண்டாகும்படிச் செய்வார்களென்று நாங்கள் நம்புகிறோம். இந்த எங்களுடைய நம்பிக்கையானது அங்கீகரிக்கப் பட்டால் 5 அல்லது 10 வருஷங்களுக்குள்ளாகவே நம்முடைய பிள்ளைகள் பலசாலிகளாகவும், தைரிய சாலிகளாகவும் ஆகி மிகவும் விர்த்தியடைவார்கள் என்பதில் சிறிதும் சந்தேக மில்லை. பாலகர்களின் அபிவிர்த்தி யொன்றாலேயே அவ்வளவு பிரயோஜனம் ஏற்படாது, இவர்களுக்கு முன் பாலகிகளின் நிலைமை மிகவும் மேன்மையடைய வேண்டிய தாயிருக்கிறது. இப்பொழுது 30 வருஷங்களுக்கு முன் பெண்பாடசாலைகளில் தேகப்பயிற்சி என்ற (சப்த மே) பேச்சே இருக்கவில்லை. இப்பொழுது சிறிது சிரத்தையுண்டாயிருக்கிறது. ஆனால், பள்ளிக்கூடங்களுக்குப் போகும் சில பெண்களுக்குமாத்திரம் இதனால் சிறிது நன்மை ஏற்படுகிறதே தவிர மற்றவர்களுக்கு ஒரு பிரயோஜனமும் ஏற்படுகிறதில்லை. முன் காலத்தைப் போல் இப்போது ஏக குடும்பவாழ்க்கை (Joint family system) இல்லாத படியால் ஒவ்வொரு வீட்டிலும் 4 அல்லது 6 பெண்கள் சேர்ந்து கொண்டு விளையாடும் ஆட்டங்களுக்கும் அவகாசம் ஏற்படுகிறதில்லை. ஆகையால் ஒருவராகச்