பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அத்தியாயம் 12. ஆகாராதிகளும் வழக்கங்களும் எந்த உணவு சிறந்தது என்பதைச் சாமான்னியமாகத் தெரிவிப்பதற்குமுன், ஐரோப்பா, அமெரிக்கா முதலிய தேசங்களின் சில நிபுணர்களுடைய அபிப்பிராயங்களைச் சிறிது வாசகர்கள் மன திற்குகொண்டு வருதல் நல்லதென்று கருதுகிறோம். வைத்திய சாஸ்திரமானது அபிவிர்த்தி நிலைக்கு வந்திருந்தாலுங்கூட வியாதிகளின் துன்பங்கள் மிக்க பயத்தைக் கொடுக்கின்றன. ஆகையால் நம்முடைய ஆகாரம் நன்றாகவுஞ் சரியாகவு மிருந்தாலொழிய வியாதிகள் நீங்கா என்று நவீன வைத்தியர்களெல்லாம் ஒரே மனதுடன் அபிப்பிராயப்பட்டிருக்கிறார்கள். முன்காலத்தில், வேண்டிய வளவு சக்தியைக்கொடுக்கவல்ல ஆகாரத்தை உட்கொண்டால் போதும் என்ற நம்பிக்கை யிருந்தது. இப்பொழுதோ ஆகாரத்தின் அளவைக் காட்டிலும் ஆகாரத்தின் குணமே மிகவும் முக்கியமான தென்று கருதப்பட்டி ருக்கிறது. நல்ல ஆகாரமென்றால் அதனிடத்தில் உயிர் வாழ்க்கைக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையான வஸ்துக்கள் இருத்தல் வேண்டும். இவ்விஷயமானது பிராணிகளின் மேல் செய்த அநேக பிரயோகங்களினாலும், மனிதனுடைய சொந்த அனுபவத்தினாலும் ஸ்திரப் பட்டிருக்கிறது. (1) “விட்டாமீன் ஏ. அல்லது வளர்ச்சியைக் கொடுக்கும்வஸ்து. இது பால், வெண்ணெய், ஆடை, முட்டையின் கணிருக்கும் மஞ்சள்பதார்த்தம் முதலிய இவைகளிலிருப்பது. நாம் இப்பதார்த்தங்களை தேவையான வரையில் தின்றால் “விட்டாமீன் ஏ" நமக்கு இதமான தன்மையில் ஏற்படும். இவ்வாகாரம் குறைந்தால் குழந்தைகள் நன்றாக வளருவதில்லை . காட் லிவர் ஆயில் (Cod Liver oil) என்பதில் இது அதிகமாயிருப்பதனாலே அதற்குப் புகழ் அதிகமாய் ஏற்பட்டிரு கிறது. “விட்டாமீன் பி. இது வெகுவாக கோதுமை, அரிசி, வாற்கோதுமை (barley) முதலியவைகளின் மேல்பதர்களில் (தவிடு, பொட்டு) அதிகமாக இருக்கின்றது. இப்பொழுது இயந்திரங்களில் (Mill) வேலை செய்கின்ற படியால் பொட்டும் தவிடும் நீங்கப்பெற்று இந்த உபயோகமான