பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அவசியமான அளவைக் காட்டிலும் அதிகமாக உணவை நாம் உட்கொள்ளுகிறோம். நம்முடைய நாகரிகத்தின் தோஷத்தினால் உருசி உருசியான பதார்த்தங்களைச் சாப்பாட்டுக்குச் சேர்த்துக் கொள்ளுகிறோம். இதனால் நமக்குத் தேவையானதைக் காட்டிலும் அதிகமான உணவு நம்முடைய வயிற்றுக்குப்போய் சேர்கிறது. போது மானபச்சை உணவு (Green food) உலர்ந்த பழவர்க்கங்கள், பால்: வெண்ணெய், தயிர் இவைகளை யுட்கொண்டால் நம்முடைய சரீரத்திற்குத் தேவையான தாது உப்புகளை (Mineral salt) க்கொடுக்கும். பொதுவாக ஒவ்வொரு வரும் இப்பொழுது உபயோகித்துக்கொண்டு வருவதைக்காட்டிலும் அதிகமாய் பால், காய்கறி, பழம் முதலிய வற்றை உபயோகித்து வந்தால் மிக்க குணம் ஏற்படும் என்று உறுதியாய்ச் சொல்ல முடியும். இவைகளில் நம்முடைய வளர்ச்சிக்கும் போஷணைக்கும் தேவையான எல்லாப் பொருள்களும், உப்புகளும் இரும்புகளும் (Vitamines, Mineral salts and iron) இருக்கின்றன. மாமிச உணவு தேவையில்லை. (Meat not necessary and wholly unnecessary) மரக்கறிபதார்த்த முண்போர் மாமிசம் உண்பவர்களைக்காட்டிலும் பலத்திலாகிலும் பொறுமை (endurance) யிலாகிலும் குறைந்தவர்களல்ல வென்பது ஐயமின்றி அனுபவத்திற்கு வந்திருக்கிறது. மாமிசத்தை விலக்கி பால், முட்டை , பாலடைகட்டி (cheese) முதலியவைகளை உட்கொள்ளுகிறவன் நல்ல நிலைமையில் இருப்பான். அன்றியும், மாமிசத்திற்காகப் பிராணிகளைக் கொல்வது கேவலம் மதியீனமேயன்றி வேறு என்ன? பசுக்கள் தாங்கள் உட்கொள்ளும் படியான மேய்ச்சலில் 187. சாரத்தைப் பால் ரூபமாக நமக்கு வெளிக்கொடுக்கின்றன. மாமிசம் எளிதில் ஜீர்ணமாகிறதில்லை. அன்றியும் அதனிடம் சில விஷபதார்த்தங்கள் சேர்ந்திருக்கின்றன. சாதாரணமாக உலகத்தில் மிக்க அறிவாளரும், பரோபகாரிகளுமான மனிதர்கள் பொதுவாக மரக்கறி பதார்த்தங்களையே உட்கொண்டிருந்தனர். பச்சையான (வேகவைக் காத) உணவுப் பொருள்களையே எப்பொழுதும் தின்ன வேண்டும்: அவைகளில் தான் நம்முடைய ஆரோக்கியத்திற்குத் தேவையான பொருள்கள் இருக்கின்றன. (1) பால்:- நாம் எடுத்துக் கொள்ளும் ஆகாரத்துடன் நுரையுடன் கூடிய பாலு மிருக்க வேண்டும். அதைக்காய்ச்சிக் குடிப்பதனால் அவ்வளவு குணம் ஏற்படாது. ஒவ்வொரு வேளைச் சாப்பாட்டுடனும் இரண்டு