பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கோப்பை சுத்தமான நுரைப்பாலைக் குடிக்கவேண்டும். தவிரவும், தயிர், மோர், வெண்ணெய், நெய் முதலிய வற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். (2) பழங்கள்:- வாழைப்பழம், கிச்சிலிப்பழம், எலுமிச்சம் பழம், கொடிமாதுளை (Citron) மாம்பழம், பேரி (Pears) திராட்சை அத்தி, அனாசு, கொய்யா, பலா முதலியவற்றை உபயோகித்தல் நலம். (3) காய்கள் (Nuts) பாதாமி, கர்ஜுரி , கொப்பரை, நிலக் கடலை, பட்டாணி, முந்திரிபருப்பு முதலியவைகளை மிதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். (4) தானியங்கள்:- நெல்லிலிருந்து உமி நீங்கப்பெற்ற அரிசி, பொட்டுடன்கூடிய கோதுமை, கடலை, பயறு உளுந்து, அவரை, துவரை முதலியவற்றை வேகவைத்தாவது அல்லது நீரில் ஊறவைத் தாவது அவரவர்களுடைய ஜீர்ண சக்திக்கேற்றவாறு எடுத்துக் கொள்ள வேண்டும். (5) முளைவந்த தானியங்கள்:- மேற்கூறியுள்ள தானியங்களை முளைகள் புறப்படும் படிச்செய்து உபயோகித்தால் உத்தமமான பலன்களேற்படும். முளையுடன் கூடிய பட்டாணி, கொள்ளு, அவரை, கடலை, பயறு உளுந்து இவைகளை உரலிலிட்டு அரைத்துக்காரம் சேர்த்து கொப்பரையும் முள்ளங்கியும் போட்டுத் தின்றால் உருசியா யிருப்பதுடன் ஆரோக்கியத்தையும் கொடுக்கும். அதில் சரீர ஆரோக்கியத்திற்கும், போஷிப்புக்கும் வேண்டிய உப்பு, விட்டாமீன் முதலிய பொருள்களிருக்கின்றன. (6) பச்சைக்காய் கறிகள்:- (Green Vegetables) கோசு, காலிபிளவர், வெண்டைக்காய், வெள்ளரிக்காய், முளைக்கீரை, கீரைத்தண்டு, வெந்தியக்கீரை, பீர்க்கங்காய், பூசனிக்காய், புடலங்காய் முதலியவைகளைக் கொப்பரையுடன் சேர்த்து உபயோகித்தால் மிக்க ஆரோக்கியத்தைத் தரும். (7) கந்தமூலங்கள், பழங்கள்:- உருளைக்கிழங்கு, வெள்ளிக்கிழங்கு, முள்ளங்கி, பூசனி, வெங்காயம், கத்தரிக்காய், வாழைக்காய், பலாக்காய் இவைகள் ஆரோக்கியத்தையும், புஷ்டியையும் தருகின்றன. இவற்றை அவரவர்கள் ஜீரண சக்திக்கும் இஷ்டத்திற்கும் ஏற்றவாறு வேகவைத்தோ, சுட்டோ, பச்சையாகவோ தின்னவேண்டும்