பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கும் அறையில் காற்றே இருப்பதில்லை யென்றும் சொல்லலாம். கிராமமான வழக்கங்களை யேற்படுத்திக் கொள்ளவேண்டும். நரம்புகள் பலங்குன்றாமல் படியும், சுவாஸ கோசங்கள் சுறுசுறுப்புடன் இரத்தமானது சுத்தமாகும் படியும் தேவையான வரைக்கும் தேகாப்பி யாசஞ் செய்யவேண்டும். பட்டினி கிடப்பது. சரியான உணவை ஆராய்ந்தறிவதிலும், அதனை மிதமாக உட் கொள்ளுவதிலும் நாம் எவ்வளவு சாக்கிரதையுடன் இருந்தாலும், நம்முடைய புத்தியின்மையினாலும் அல்லது அப்பியாச தோஷத்தினாலும் கெட்ட ஆகாரங்களும், பானாதிகளும் நம்முடைய வயிற்றுக்குப் போய்ச் சேரும். இவைகளால் ஏற்படும் கெட்ட குணங்களை யொழிப்பதற்காக பட்டினி கிடக்க வேண்டியது அவசியமாயிருக் கின்றது. நன்றாகப் பசி ஏற்பட்டாலொழிய சாப்பிடாமலிருப்பது சிறந்த உபாயமாயிருக்கின்றது. பசி உண்டாகாமலிருக்குங்கால் நம்முடைய ஜீர்ண இந்திரியங்களுக்கு அதிக வேலையைக் கொடுக்கக்கூடா தென்பதை நாம் நன்றாய் அறியவேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது அல்லது 15 நாளைக்கு ஒருமுறையாவது நாம் ஒன்றையும் தின்னாமலிருக்க வேண்டும். அப்படிச் செய்தால் மிகவும் நல்லது. அதற்காக ஒருநாளைக் குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும். எல்லா மதத்தினரும் பட்டினி கிடப்பதற்காக (விரதத்திற்காக சில நாட்களைக் குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உதாரணம் லெண்டு , ரம்சான், ஏகாதசி (Lent, Ramzan, Ekadasi, etc). பூர்த்தியாகப் பட்டினி கிடக்குங்கால் சிறிது நீரைத் தவிர்த்து வேறு எதையும் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் சிலர் பகலில் கிச்சிலிப்பழத்தின் இரசத்தையாவது இரண்டு அல்லது மூன்று கிச்சிலிப்பழங்களை யாவது சாப்பிடும்பொழுது எடுத்துக் கொள்ளுகிறார்கள். ஆகாரக் குழாய் சுத்தமாக வேண்டுமானால், கிக்சிலிச் சுளைகளைத் தோலுரித்து விட்டுத் தின்பதே எப்பொழுதும் சிறந்ததாகும். தோலையும் விதைகளையும் தின்பதனால் குணம் உண்டு. பட்டினி கிடக்கும் நாட்களில் தினம் மும்முறை ஒவ்வெரு கோப்பை மோரைக் குடித்துவந்தால் மிகவும் நல்லது. இதனால் இரைப்பையும் ஆகாரக்குழாயும் சுத்தமடைந்து பட்டினியிருப்பதால் ஏற்படும் தொந்திரவையும் தப்புவிக்கும். ஜலத்திற்குக்கொஞ்சம் தேனைச் சேர்த்துக் குடிப்பதனால் பசி ஏற்படா திருப்பதுமன்றி, அதிக காரியசக்தியும் உண்டாகும். இதைக் குடித் தால் உங்களுக்குப் பட்டினி யிருந்ததின் சிரமம் தோன்றாது.