பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

1926 அக்டோபர் மாதத்து பிசிகல் கல்சர் என்னும் மாதப்பத்திரிகையில் பர்னார் மெக்பாடன் கூறியிருப்பதென்ன வெனில்: "மித மீறி உணவை உட்கொள்ளுபவர்கள் அகாலமரணத்திற்காளாகிறார்கள். சரீரத்தின் எல்லா இந்திரியங்களுக்கும் சைதன்யத்தைக் கொடுப்பதில் பட்டினி கிடப்பதைக்காட்டிலும் பலப்படுத்தும் ஒளஷதம் வேறு கிடையாது. திருட்டுப்பசிக்கு அடிமைப்பட வேண்டாம். நம்முன்னோர்களைப்போல நாமும் அவ்வப்பொழுது பட்டினியிருந்து வந்தால் நாம் நெடுங்காலம் ஜீவிக்கமுடியும். காபி, டீ, கோகோ முதலிய உத்தீபன வஸ்துக்கள் மிக்க தீங்கை விளைவிக்கின்றன. அவைகளை வெகு காலமாக உபயோகிப்பதனால் அவைகளின் கண் உள்ள விஷ பதார்த்தங்கள் ஜீர்ணேந்திரியங்களில் சேர்ந்து, அவ்விந்திரியங்களை மட்டுமல்லாமல், நரம்புப் பிரதேசங்களையெல்லாம் கெடுத்து, அநேக வியாதிகளைக் கொண்டு வருதற்குக் காரணமாகின்றன. இப்பழக்கத்தின் கெட்ட பலன்கள் நம்முடைய சந்ததிகளுக்கும் போய் பரவாமல் இருக்க மாட்டா. (அதாவது நம்முடைய சந்ததிகளுக்கும் போய்ப்பரவும்) சிரத்தையுடன் பிரயத்னஞ் செய்பவர்கள் எப்பேர்ப்பட்ட தூர் அப்பியாசங்களையும் வெல்ல முடியும். மனதின் ஆசைகளை நாசப் படுத்துவதே இதற்குத் தக்கவழியாகும். கடைசி எச்சரிக்கை. ஆரோக்கியம், வல்லமை, தீர்க்காயுள் இவைகளையடைய வேண்டு மென்பதே நம்முடைய உத்தேசம். தசைநார்களை விசேஷமாகப் பலப்படுத்தி கீர்த்தியுள்ள வர்களாக வேண்டுமென்ற விருப்பம் நமக்கு இல்லை. ஆகையால் எவ்வளவு நமஸ்காரங்களைச் செய்தல் சாத்தியம். எந்த உணவையுட்கொள்ள வேண்டும், எவ்வளவு உட்கொள்ள வேண்டும், எவ்வளவு வேலையைச் செய்ய முடியும், எவ்வளவு நேரம் வேடிக்கை, ஓய்வு இவைகளையடையவேண்டும் என்ற இவ் விஷயங்களை நாம் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். வேலையும் ஓய்வும், தூக்கமும் விழிப்பும், ஆகாரமும் தேகப் பயிற்சியும், முதலிய இவைகள் எந்த நிதானத்தில் இருக்கவேண்டு மென்பதை அவரவர்களே சொந்த அனுபவத்தினால் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தாயிருக்கிறது. அந்நியர்களால் இது சாத்திய மாகாது.