பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அத்தியாயம் 1.

   (1) தேகப்பயிற்சி அவசியமென்பது.

மனிதனானவன் பலவானாகியும், உழைப்பாளியாகியும் நெடுங்காலம் ஜீவித்திருக்க வேண்டுமானால் அதற்குத் தேகட்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. அதிலும் ஜீவனத்திற்கு மிகவும் கஷ்டப்படும் இக்காலத்திலோ தன்னையும், தன்னைச் சேர்ந்துள்ளாரையும், தன் தேசத்தவரையும் காப்பாற்றுவதற்குச் சக்தியுள்ளவனாகி ஜீவனத்திற்குரிய வழியைத் தேடிக்கொள்ள வேண்டுமானால் ஒவ்வொருவனுக்கும் தேகப்பயிற்சி மிகவும் தேவையானது . நல்ல உணவு, சுத்தமான நீர், நல்லகாற்று, வேண்டிய அளவு வெயில், இவைகளைப்போலவே தேகப்பயிற்சியுங்கூட மனிதனுக்கு மிகவும் முக்கியமா யிருக்கின்றது. ஜர்மனி தேசத்துச் சக்ரவர்த்தியாயிருந்த கெயிசர் என்பவர் 1927-ம் பிப்ரவரிமாதத்து "பிசிகல் கல்சர் என்னும் பத்திரிகையில் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார்:-"சரீரத்திற்கும் மனதிற்கும் திருப்திகரமான தேகப்பயிற்சியைக் கொடுக்க வேண்டுவது மிகவும் அவசியம் என்னும் விஷயத்தை எல்லாருக்கும் போதிக்கவேண்டியது முக்கியம். நவீன நாகரிகத்தினால் நம்முடைய தேகத்தில் சேரும் படியான விஷக் கிருமிகளைச்சரியான தேகப்பயிற்சியினால் நாசப்படுத்தினாலொழிய நாம் நெடுநாள் ஜீவித்திருக்க முடியாது. பர்னார் மெக்பாடன் என்பவர் சொல்லி யிருப்பது என்ன வெனில்:- "அநேகர் தாம் வாழவேண்டியிருக்கிற சிருஷ்டி காலத்திற்கு 25 அல்லது 50 வருடங்களுக்கு முன்னரே இறந்து விடுகிறார்கள். இதற்குக் காரணம் என்ன வென்றால் தேவையான தேகப்பயிற்சி யினால் எல்லா அங்கங்களையும் தங்கள் தங்கள் வேலைகளைச் சரியாகச் செய்யும் படித் தேகத்தைக் காப்பாற்றிக்கொள்ளா திருப்பதே " பொதுவாய் மக்கள்களெல்லாம் 8 அல்லது 10 வருஷங்கள் வரையில் வீட்டின் உள்ளேயோ புறம்பேயோ ஓடியாடித் தேவையான மட்டும் தேகப்பயிற்சியைச் செய்து கொண்டிருக்கிறார்கள்: ஆகையால் அவர்களுக்கு ஒரு கிரமமான தேகாப்பியாசம் தேவையா யிருப்பதில்லை. ஆனால் பள்ளிக்கூடங்களுக்குப் போகும் பிள்ளைகள்