பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

(7) அதற்கு யாதொரு பிரயத்தனமும் பழக்கமும் தேவையர் யிருக்கக்கூடாது. (8) பணம் காசு செலவழிக்கத்தக்கதா யிருக்கக் கூடாது. (9) அது திருப்திகரமாயும் ஆற்றலோடு கூடிய தாயும் இருக்க வேண்டும். மேற்கண்ட நிபந்தனைகளுக்கெல்லாம் சரியாக இருப்பது சூர்யநமஸ்காரங்களைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆகையால் இத்தேகப்பயிற்சியை எல்லாப் பள்ளிக்கூடங்களிலும், கலா சாலைகளிலும் (Schools & Collges) கண்டிப்பாய் ஏற்படுத்தவேண்டும் என்று நாங்கள் மிகவும் வற்புறுத்திக் கூறுகிறோம். அத்தியாயம். 14. முடிவுரை :- (Conclusion.) லாகூரில் “வேதிக்மாகஜின் (Vedic magazine) என்ற பத்திரிகையின் 1927ஹத்து செப்டம்பர் மீ தத்துச்சஞ்சிகையில் உயிர் வாழ்க்கையின் நம்பிக்கை (“Expectation of life") என்ற ஒரு விஷயத்தை டாக்டர். இராதாகிருஷ்ண, எம். பி. பி. எஸ். என்பவர் எழுதியிருக்கிறார். அதன்கணுள்ள சில அம்சங்களை வாசகர்கள் நினைப்புக்குக் கொண்டு வரவேண்டுமென்று இச்சிக்கிறோம் :-- "இந்தியா தேசத்தின் ஜனங்கள் ஆயுர்பாவத்தை அதிகப் படுத்திக் கொள்வதற்காகக் காட்டப்பட்டிருக்கும் உபாயங்கள் : “இந்த உபாயங்களைச் சொல்வதற்குமுன் ஆயுர்பாவத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டியது அவ்வளவு அவசியமோ என்பதைக் கவனிக்க வேண்டுமாயிருக்கிறது. காரியம் அதிகமாக அதிகமாக ஆயுள் குறைகிறதென்றும், அதியாகக் காரியஞ் செய்வதுடன் கூட உயிருடன் இருப்பது அசாத்தியமென்றும், அவைகள் ஒன்றுக் கொன்று விரோதிகளாயிருக்கின்றன வென்றும் டாக்டர். சில்வெஸ்டர் கிரஹாம் (Dr. Sylvester Graham) பாவித்திருக்கிறார். ஆனால் தேகப்பயிற்சியின் நவீன நிபுணர்கள் இந்த அபிப்பியாயத்தை அங்கீகரிப்பதில்லை. நம்முடைய ஆகார வியவகாரங்களில் நாம் சரியா யிருந்தால் எப்பொழுதும் வேலை செய்துகொண்டிருந்த போதிலும், நம்முடைய ஆயுர்பாவத்திற்குச் சிறிதும் பாதகம் ஏற்படாதென்று அவர்கள் நிர்விவாதமான நிதர்சனத்தைக் காட்டியிருக்கிறார்கள்.அன்