பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

றியும், அடியிற்கண்டுள்ள காரணங்களுக்காகியும் தீர்க்காயுள் அவசிய மாயிருக்கின்றது: "1. கிழத்தனத்திலே ஏற்படத்தக்க சுகசந்தோஷங்கள். ஆரோக்கியத்துடன் கூடிய கிழத்தனமே உண்மையான வரப்பிரசாதம் என்னலாம். 2. ஜனசமூகத்தின் நோக்கத்திலிருந்து பார்த்தால் 80 - வயதான மேதாவியான கிழவன் தன்னுடைய தேசத்திற்கு ஒரு பெரிய பூஷணமாக விளங்குகிறான். அவன் மிக்க உலக அனுபவத்தை யடைந்திருப்பதுமன்றி துராசை, துரகங்காரம் இவை முதலியவை நீங்கப் பெற்றவனாயு மிருக்கிறான். ஆகையால் நியாயாதிபதியாகவும், மந்திராலோசனைக்காரனாகவும் தன்னுடைய தேசத்திற்கு மிக்க உதவியைச் செய்யவல்லவனாயிருக்கிறான். 40 வயதுள்ள வனாபிருந்தகாலத்தில் அவனால் ஆகவேண்டிய பிரயோஜனத்தைக் காட்டிலும் 80 வயதினனா யிருக்கும் பொழுது அதிக பிரயோஜனம் உண்டாகும். அல்லாமல் 40 வயதான இருவர்களைக் காட்டிலும் 80 வயதான ஒருவனால் அதிக பிரயோஜனம் உண்டாகும். ஆரோக்கியகரமான 50 வயதுக்கு மேற்பட்ட கிழவர்கள் இறப்பதனால் ஜனசமூகத்திற்கு ஒரு பெரிய நஷ்டம் உண்டாகிற தென்பது உண்மையான வார்த்தையே. ஆனால் மேதாசக்தியை இழந்து கொண்டு காரியஞ் செய்வதற்கும் சாமர்த்தியமின்றி சும்மா அதிககாலம் வாழ்ந்து கொண்டிருப்பது சரியன்று. மேதாசக்தியுடனும் முயற்சியுடனும் வெகுகாலம் வரைக்கும் வாழ்வதற்கு அடியில் கண்ட நியமங்கள் காட்டப்பட் டுள்ளன : ”நியமங்கள்

	1.  பிரம்மசரியமும் விவாகச் சீர்திருத்தமும். 

2. தேகப்பயிற்சியும் காரியகௌரவமும். 3. ஆகாரவியவகாரங்களில் மிதமாகியிருந்து ஆரோக்கிய நியமங்களுக்கு

   அனுகூலமான வாழ்க்கை . 

4. சுத்தமாக வைத்துகொள்வதில் ஞானம் (Sanitary Con science). 5. மானசிக ஆரோக்கியம். (சாந்தம், நல்லதாகுவது என்ற சுபதிருஷ்டி)

  (Mental Hygiene-Poise and (optimism). 

1.5 மனிதர்களுக்கு-for individuals).] 6. குழந்தைகள், தாய்கள் இவர்களுடைய நல்வாழ்வு

   (Mater nity and child – welfare).