பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

7. ஸ்தல ஆரோக்கியத்திற்காகவும், தொத்து வியாதிகளை நிவர்த்தி

   செய்வதற்காகவும் ஏற்பாடுகள். 

8. வித்யாப்பாசத்தின் ஏற்பாடுகள். (6-8-ஜனசமூகத்திற்கு- For Community as a whole). "மேலே கொடுத்திருக்கும் எல்லா நியமங்களையும் விவரமாகத் தெரிவிக்க வேண்டுமானால் ஒவ்வொன்றைப்பற்றியும் ஒரு வியாசம் எழுதவேண்டிய தாயிருக்கும். ஆயுர்பாவத்தை அதிகப்படுத்துவதற்காக சைகைகள் கொடுப்பதற்காக அமெரிக்கா கண்டத்தில் ஒரு சபையை ஏற்படுத்தவேண்டியதாயிற்று. அதில் வைத்தியசாஸ்திரத் தில் நிபுணரான 100 தெரிந்த வைத்தியர்கள் அங்கத்தினர்களாகி மனிதர்களுக்குப் பின்வரும் குறிப்புக்களைக் காட்டியிருக்கிறார்கள். (1) காற்று. (1) நீங்கள் உபயோகிக்கும் ஒவ்வொரு அறையிலும் காற்று நன்றாகப் பிரவேசிக்கத்தக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். (2) இலேசாகியும், தாராளமாகியும் காற்று பிரவேசிக்குமாறு கண் அறையுள்ள ஆடையைத் தரித்துக் கொள்ளுங்கள் . (3) தேகப்பயிற்சி, வெளியில் வேலைசெய்யும் வினோதங்கள். (4) கூடுமானால் வெளியில் படுத்துத் தூங்குங்கள். (5) பூர்த்தியாக சுவாஸ உச்சுவாசங்களைச் செய்யுங்கள். (2) உணவு. (6) மிதமான வாகாரமும், சரியான நிறையும். (7) மாமிச உணவையும், முட்டைகளையும் சிறிதாக உட்கொள்ள வேண்டும். (8) உங்களுடைய உணவில் சிறிது கெட்டியான பதார்த்தமும், சிறிது பருமனானபதார்த்தமும், சிறிது பச்சை (வேகவைக்காத) பதார்த்தமும் சேர்ந்து இருக்கவேண்டும். (9) நிதானமாக போசனஞ் செய்யவேண்டும். (3) விஷங்கள் (10) விசர்சனஞ் செய்வது முழுமையும், கிரமமாயும், அடிக்கடி யும் ஆகிக்கொண்டிருக்கவேண்டும். (11) நிற்கும் பொழுதும், உட்காரும்பொழுதும் நடக்கும் பொழுதும் சிறிதும் வளையாமல் நிமிர்ந்திருக்க வேண்டும். (12) விஷபதார்த்தங்களும் வியாதி சம்பந்தமான விஷக்கிருமி களும் சரீரத்தில் சேராமலிருக்கும்படிச் சாக்கிரதையாய் இருக்க வேண்டும்.