6
சூளாமணி
தான். இதனைக்கேட்ட விசுவநந்தி முனிவரன், அவனை நோக்கிக் குரோதாக்கியால் அவனைத் தஹிப்பான் போன்று பார்த்து, "இந்தப் பரிகாசத்தின் பலனை மற்றொரு பிறப்பிற் காட்டுவேன் " என்று கூறி உயிர்நீத்த னன். விசாகபூதியும் விசுவநந்தியும் இறுதியில் மகா சுக்ரகல்பத்தில் தேவராயினர்.
விசாகநந்தி நெடுங்காலம் சம்சாரசாகரத்தில் உழன்று, பிறகு விஜயார்த்த பருவதத்து உத்தரச்ரேணி யில் அளகாபுரத்து வித்யாதரராஜா மயூரக்ரீவன், தேவி நீலாஞ்சனை இவர்களுடைய புதல்வன் அச்சுவக்ரீவன் என்பானாகிப் பிரதி வாஸுதேவனாயினன்.
இஃதிப்படியிருக்க ஸுரம்ய தேசத்தில் பௌதாபுரத்தில் பாகுபலி ஸந்த தியைச் சேர்ந்த பிரஜாபதி யெனப் பெயரிய அரசனொருவனிருந்தான். அவனுக்கு ஜயவதி ம்ருகாவதி யெனப் பெயரிய மனைவிய திருவருளர். விசாகபூதியாகியதேவன் ஜயவதியின் குமாரனா யவதரித்து விஜயன் என்ற பெயருடன் பல தேவனாயினான்; விசுவாந்திதேவன் மருகாபதி புத்திரனாகி, த்ரிப்ருஷ்டநாம வாஸுதேவனாயினன். இவ்விருவர்களும் நிறத்தாலும் குணத்தாலும் படைகளாலும் லீலைகளாலும் முறையே பலதேவ கிருஷ்ணாவதார மூர்த்திகளை யொத்திருக்கின்றனர். பிரதி வாஸுதேவனாயுற்பவித்த அச்சுவகண்டன் ஒருவாறு சிசுபாலனை யொத்துமுளன். விஜயதிவிட்ட மிருவர்களின் ஐசுவரியங்களைப்பற்றி, ஸ்ரீ புராணத்திற் பின்வருமாறு கூறப் பட்டுள்ளது:—
"லாஸுதேவனுக்கு ஸ்வயம்ப்ரபை முதலாகிய