8
சூளாமணி
இளையோனாகிய திவிட்டனுக்கே சிறப்புக் கூறப்பட்டுள்ளது.
வாஸுதேவர்கள் ஒன்பதின்மரென்றும், அவருள் திவிட்டன் முதல்வனென்றும், பலதேவர்கள் ஒன்பதின்மரென்றும், அவர் தம்முள் விஜயனே முதல்வனென்றும், வாஸுதேவர்களுக்குப் பகையாகிய பிரதி வாஸு தேவர்கள் ஒன்பதின்மரென்றும் அவர் தம்முள் ஹயக்ரீவன் (அச்சுவகண்டன்) முதல்வனென்றும் ஜைன நூல்கள் கூறும்.
திவிட்டன் கோடிக்குன்றத்தைப் பெயர்த்தெடுத்தது கண்ணபிரான் கோவர்த்தனகிரியைக் குடையாக ஏந்தியதையும், திவிட்டன் சிங்கத்தைப் பிளந்தது, கண்ணன் பல மிருகரூபமாய் வந்த அசுரர்களைக் கொன்றதையும் அச்சுவகண்டன் அனுப்பிய சண்டவேகையைத் திவிட்டன் தொலைத்தது, வாணன்போரில் ஜ்வரதேவதை யைக் கண்ணன் தொலைத்ததையும் நிகர்க்கும். இவை பற்றியே ஜைனர்களும் இவனைத் திருமாலின் அம்சமாகக் கொண்டாடினாரென்பது, 'பகுவாயரியேறு போழ் ந்த செங்கண் நெடியான்,' 'கொற்றங்கொணேமி நெடுமால் குணங்கூற' என்னும் பாயிர அடிப் பகுதிகளால் அறியக்கிடக்கும்.
கண்ணனுக்கு மாறாய்த்தோன்றி, திருமாலின் சின்னமாகிய சக்கிரம் முதலிய பஞ்சாயுதங்களைத் தரித்து மாயாகருடனொன்றை வாகனமாகக்கொண்டு விளங்கி, முடிவில் கண்ணன் கைச்சக்கிரத்தால் முடிந்த பௌண்டரிக வாசுதேவன் அச்சுவகண்டனை ஒருவாறு நிகர்ப்பன்.