உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளாமணி (வசனம்).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை

9

இந்நூலிற் சொல்லியுள்ள விஞ்சையருலகு எனப்படும் வித்தியாதரலோகம் இமயமலையின் வடபுறச் சாரலில் ஹிந்து கங்கை பிரமபுத்திரியாகிய புண்ணிய நதிகள் உற்பவிக்கும் பிரதேசமா யிருக்கலாமென்று புலப்படுகிறது. அவ்வித்தியாதரவுலகம் உத்தரசேடி தக்ஷிண சேடியென்று இருபகுப்பினை யுடையதென்றும், அவ்விருசேடியார்க்கும் பலதடவைகளிலும் போர் நிகழ்ந் துள்ளவென்றும், வித்தியாதரர் மாயவித்தையில் வல்லவராய் ஆகாயத்திற் பறக்குஞ் சக்தியுடைய வொரு வகைத் தேவஜாதியரென்றும், அவர்க்கு மண்ணுலகத்தவர் அடங்கிக் கப்பங்கட்டி வந்தனரென்றும், இந்நூலின் கதை கூறுகின்றது. வித்தியாதரர்க்கும் மண்ணுலகிளர்க்கும் மணவினைச்சம்பந்தம் இந்நூலுட் கூறப்பட்டுளதுபோலச் சிந்தாமணியென்னும் சைனநூலிலும் வித்தியாதர மங்கையாகிய காந்தருவதத்தையினைச் சீவகன் மணம்புரிந்த வரலாறு கூறப்பட்டிருக்கிறது. இவற்றையாய்ந்து நோக்குமிடத்து மிக்க வலியுள்ளவர்களான இமயமலைச் சிகரவாசிகளுள் இவ்வித்தியாதரரு மொருவகுப்பினரோ என்று கருதுதற்கிடமுண்டு.

மாநுடர்க்குப் பின்னிகழும் சம்பவங்களை முன்னுண்ர்த்துவதன் பொருட்டுக் கனவுகள் நிகழுமென்பதும் அவற்றைச் சோதிடம் வல்ல நிமித்திகர்கள் நன்காராய்ந்து அக்கனவுகளின் இரகசியார்த்தங்களைத் தெரியப் படுத்துவரென்பதும், அந்நிமித்திகர்களை அரசர்கள் நன்குமதித்துப் பெருமையாகத் தமது ஸமஸ்தாநிகர்களுட் சேர்த்துவைத்தனரென்பதும், இந்நூலால் விளங்குகின்றன. இவ்வாறே, சிந்தாமணியிலும் சிலப்பதிகாரத்தி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளாமணி_(வசனம்).pdf/13&oldid=1957887" இலிருந்து மீள்விக்கப்பட்டது